இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களும் விமானத்தில் செல்ல ஏதுவாக மத்திய அரசு கொண்டு வந்த UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவிற்குள், சிறிய நகரங்களை இணைக்க விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இப்போது வெளிநாட்டிலும் புதிய இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளன. இதற்காக, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) திங்கள்கிழமை ஒரு மமுக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் காரணமா, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் போன்ற நிறுவனங்கள் உலகின் புதிய நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்க முடியும். இதனால் விமானப் பயணிகளுக்கு நேரடி பலன் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக உத்தரவு


சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் DGCA ஜூன் 12 அன்று வெளியிட்ட உத்தரவில், இந்திய நிறுவனங்கள் புதிய சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை தொடங்குவதற்கான விதிகளில் பெரும் தளர்வு அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. விதிகள் தளர்த்தப்படுவதால், உள்நாட்டு விமான நிறுவனங்கள், வெளிநாட்டு நகரங்களுக்கான சேவையை தொடங்குவது மிகவும் எளிதாக இருக்கும். எந்தவொரு புதிய சர்வதேச இடத்திற்கும் விமானங்களைத் தொடங்குவதற்கு முன் நிறுவனங்களின் தயார் நிலையை DGCA மதிப்பாய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதும். மேலும் அவை அனைத்து அளவீடுகளிலும், தர நிலைகளிலும் பொருந்திய பின்னரே விமானங்களைத் தொடங்க அனுமதிக்கப்படுகின்றன.


மாற்றப்பட்டுள்ள சில விதிகள்


டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இப்போது, ​​தர நிலைகளில் 33 புள்ளிகள் என்ற நிலைக்கு பதிலாக, அவர்களின் தரநிலை 10 புள்ளிகளில் மட்டுமே தீர்மானிக்கப்படும். இதன் பொருள் இந்திய விமான நிறுவனங்கள் 33 க்கு பதிலாக 10 தரநிலைகளை மட்டுமே பூர்த்தி செய்தாலே, புதிய சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். டிஜிசிஏ தனது அறிவிப்பில், இந்திய விமான நிறுவனங்கள் வெளிநாட்டு நகரங்களுக்கான விமான சேவைகளை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணணுமா... கன்பர்ம் சீட் கிடைக்க சில டிப்ஸ் இதோ!


இண்டிகோ 6 இடங்களுக்கு விமான சேவையை தொடங்கவுள்ளது


இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா (Air India), விஸ்தாரா (Vistara), இண்டிகோ (Indigo), ஆகாசா ஏர் (Akasa Air) ஆகியவை சர்வதேச விமானச் சேவைகளை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன. இண்டிகோ தனது புதிய விமான சேவைகளை ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், நிறுவனம் புதிய விமான சேவைகளைத் தொடங்கும். இதே போல், ஏர் இந்தியாவும் ஐரோப்பா, மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு புதிய விமான சேவைகளை தொடங்க தயாராகி வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் பல புதிய சர்வதேச இடங்களுக்கு விமான சேவையை தொடங்க ஆகாசா ஏர் முடிவு செய்துள்ளது.


குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்துச் சேவை வழங்கும் உடான்


மத்திய அரசு, கடந்த 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதம், இந்தியாவில் உள்ள சாமானிய மக்களும் விமானத்தில் பயணிக்க ஏதுவாக குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்துச் சேவை வழங்கும் உடான் (UDAN) திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அனைத்துத் தரப்பு மக்களும் உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்யும் வகையில் உடான் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் ரூ. 2,000 என்ற அளவில் குறைந்த விமானக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வீட்டு கடன் பெற வேண்டுமா? இந்த வழிகளில் எளிமையாக பெறலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ