அன்னையர் தினம் 2022: அம்மா என்றால் நமக்கு நினைவிற்கு வருவது அன்பு, கருணை, இனிமை, தியாகம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.  அன்னையின் அன்பு தனித்துவமானது. அதனை எதனுடனும் ஒப்பிட முடியாது. குழந்தைகளின் மீது தாய் வைத்திருக்கும் அன்பை அளவிடவே முடியாது. அந்த அன்பு மிகவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே கூறுகிறோம். தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை என்ற முதுமொழிக்கு ஏற்ப  வாழும் நமது தாய்க்கு, அன்னையர் தினத்தில்  என்ன கொடுப்பது என குழப்பமாக உள்ளதா. ...உங்கள் அன்னையை ஆச்சரியத்தில் ஆழ்த்த சில சிறந்த யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


1. உங்கள் தாய்க்கு தோட்டம் பிடிக்கும் என்றால் உங்கள் கொல்லைப்புறத்தை அல்லது பால்கனியை இன்னும் அழகாக்க இதை விட சிறந்த பரிசு வேறு எதுவும் இல்லை. அவர்களுக்கு  பிடித்த பூ அல்லது மூலிகை மரக்கன்றுகளை பரிசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த செடிகள் பூக்கும் போது, ​​அவை நிச்சயமாக உங்களை நினைவுபடுத்தும். பரிசு வழங்கினால் மட்டும் போதாது, தோட்ட வேலைகளில், களைகளை அகற்ற, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் என அவருடன் இணைந்து வேலை செய்யலாம்.


2. அன்னையர் தினத்தன்று அம்மாக்களை மகிழ்விக்க சினிமா கூட்டி செல்லலாம். ஆனால் அல்லது வீட்டிலேயே அனைவரும் ஒன்றாக இணைந்து ஏதாவது அம்மாவிற்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படத்தை ஓடிடியில் பார்க்கலாம். 


மேலும் படிக்க | Gold Price: தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை; மகிழ்ச்சியில் இல்லதரசிகள்


3. வாழ் நாள் முழுவதும் நமக்காக உழைத்த தாய்க்கு சிறிது, ஓய்வு அளிக்கும் வகையில், மசாஜ்  செய்ய ஏற்பாடு செய்யலாம். இப்போது அர்பன் கிளாப் போன்ற வசதிகள் உள்ள நிலையில், உங்கள் தாய் எங்கிருந்தாலும் அதற்கான ஏற்பாடு செய்யலாம். 


4. தாய்மார்கள் நாள் முழுவதும் தங்கள் அலுவலகம் அல்லது வீட்டு வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார்கள். நடனம், பாட்டு, யோகா, இசைக்கருவி வாசித்தல் போன்ற பொழுது போகு விஷயங்களை அவர்கள் தொடர ஏற்பாடு செய்யலாம். அவர்கள் கற்க நினைத்த கலை வகுப்பில் சேர ஏற்பாடு செய்யலாம். இதற்கு ஆன்லைன் வகுப்புகளும் உள்ள நிலையில், அந்த முயற்சி அவர்களின் முகத்தில் நிச்சயம் புன்னகையை வரவழைக்கும்.


மேலும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் சர்வதேச அன்னையர் தினத்தன்று தங்களுடைய தாய்க்கு பரிசு பொருட்களை வாங்கி தந்து கடமைக்கு வாழ்த்துக்கள் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தாயிடம் தொடர்ந்து மனம் விட்டு பேசுவதுடன், தாய் தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை மனதார உணர்ந்து நடந்து கொள்வதே தாய்க்கு நாம் அளிக்கும் சிறந்த அன்னையர் தின பரிசாக அமையும்.


மேலும் படிக்க | இந்த 4 வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR