'நாரி சக்தி' (பெண்கள் சக்தி) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி 2018-ம் ஆண்டின் வார்த்தையாக சேர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டுதோறும் மக்களிடம் பிரபலமாக உள்ள வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் தனது டிக்ஸ்னரியில் சேர்த்துக் கொள்வது வழக்கம். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழககத்தால் நிர்வகிக்கப்படும் ஆக்ஸ்போர்டு அகராதி ஆண்டுதோறும் புதிய வார்த்தைகளை சேர்த்து வருவதுடன் இவற்றில் முன்னிலை பெறும் வார்த்தைக்கு ஆண்டின் சிறந்த சொல்லாக மகுடமும் சூட்டுகிறது.


அந்த வகையில் 2018-ம் ஆண்டின் வார்த்தையாக 'நாரி சக்தி'யை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி தேர்வு செய்துள்ளது. 'நாரி சக்தி' என்றால் பெண்கள் சக்தி என்ற பொருள்.