நவராத்திரி 10ம் நாள்: வெற்றி தரும் விஜயதசமி...வித்யாரம்பத்திற்கு நல்ல நேரம்
Navaratri 2023 Day 10 Vijayadasami: அம்பிகை, மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமியன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும்.
நவராத்திரி பண்டிகை 10 ஆம் நாள் விஜயதசமி சிறப்பு வழிப்பாடு: இன்று இந்தியா முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்படுகின்றது. நவராத்திரியில் வரும் தசமி, அதாவது பத்தாவது நாள் விஜய தசமியாகக் (Vijayadasami) கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் துவக்கப்படும் அனைத்து காரியங்களும், வெற்றியைத் தேடித் தரும் என்பது ஐதீகம். படிப்பு, கலைகள மற்றும் பல நல்ல செயல்களை மக்கள் விஜயதாமியன்று துவக்குகிறார்கள்.
வட இந்தியாவில் இந்த நாளில் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. ராமர் ராவணனை வெற்றிகொண்ட நாள் என்பதை வலியுறுத்தும் விதமாக, பல இடங்களில் ராவணனை எரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. நம்முள் இருக்கும் தீய குணங்களை எரித்து நன்மையால் அவற்றை வெல்ல வேண்டும் என்பது இதன் தாத்பர்யமாகும். தீமைக்கு எதிரான சத்தியத்தின் வெற்றியை இந்த நாள் குறிக்கிறது. இந்த புனித நாளில் சில விஷயங்களைச் செய்வது நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும். இவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்:
நல்ல துவக்கம்: நாம் பல நாட்களாக ஏதாவது கலையை கற்கவோ அல்லது ஒரு புதிய பணியை செய்யவோ திட்டமிட்டிருந்தால், அதை நாம் இந்நாளில் தொடங்கலாம். விஜயதசமி அன்று துவங்கும் வேலை வெற்றிப்பாதையை நோக்கி மட்டுமே பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருப்பார்களாம்..! யார் யார் தெரியுமா..?
மீன் தரிசனம்: விஜயதசமி அன்று தண்ணீரில் மீன்களைப் பார்ப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவதற்கான அறிகுறியாகும்.
பறவை தரிசனம்: பனங்காடை எனப்படும் நீலகண்ட பறவையைப் பார்ப்பது மிகவும் புனிதமான அடையாளமாகக் கருதப்படுகிறது. நம்பிக்கைகளின்படி, அப்பறவையைப் பார்ப்பவரின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேலும் அவரது வாழ்க்கையில் எதிர்பாரா பல நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும்.
சிவன் மற்றும் ராமர் தரிசனம்: சிவன் கோயில் அல்லது ராமர் கோயிலுக்குச் சென்று வணங்குவது இந்த நாளில் புனிதமான ஒரு செயலாகக் கருதப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் தரிசத்திற்கு சிறப்பு பலன் கிடைக்கும். பண வரவு, உடல் ஆரோக்கியம், புகழ், புத்தி கூர்மை ஆகியவை வந்து சேரும்.
வெற்றிலை பாக்கு உண்பது: விஜயதசமியன்று பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலையை உட்கொள்வது மிகவும் மங்கலமான விஷயமாகும். இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மேலும் இந்த நாளில் ஆஞ்சநேயருக்கு தாம்பூலம் நெய்வேத்தியம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் பல வெற்றிகள் நம்மை வந்தடையும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.
நவராத்திரி பத்தாம் பத்தாம் நாள் பூஜை முறை:
வழிப்பட வேண்டிய தேவி : அம்பிகையை விஜயாம்பாள் (பார்வதியின் ஒரு அம்சம்)
விஜய தசமியையொட்டி பூஜையறையில் மலர் கோலமிட வேண்டும். பால் பாயாசம், இனிப்பு வகை, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சதாம், நைவேத்யம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு வித்யாரம்பம்:
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.
நல்ல நேரம்:
இந்நிலையில் இந்த ஆண்டு விஜயதசமி விழா அக்டோபர் 24 ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 05.22 முதல் 06.59 வரையிலான நேரம் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நவராத்திரி ஒன்பதாம் நாள் - சரஸ்வதியை எந்த ரூபத்தில் வழிபட வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ