Navaratri 2023 Day 3: நவராத்திரி 3ம் நாள்.. பூஜை நேரம், நைவேத்தியம், அலங்காரம் விவரம்
Navaratri 2023 Day 3: நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையையும், இரண்டாம் நாள் ராஜ ராஜேஸ்வரியையும் வழிபட்டோம். இதைத் தொடர்ந்து மூன்றாம் நாளில் என்ன சிறப்பு என்பதை அறிந்துக்கொள்வோம்.
நவராத்திரி பண்டிகை மூன்றாம் நாள் சிறப்பு வழிப்பாடு: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்படும் ஐராப்பு பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri 2023) பண்டிகை, அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகை மூன்றாம் நாள் 2023:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:
நவராத்திரியின் (Navaratri) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
மேலும் படிக்க | Blue Aadhaar Card: நீல நிற ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நவராத்திரி பூஜை:
நவராத்திரியின் மூன்றாம் நாள் (Navratri Day 3) அதாவது அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையிலான நேரத்திற்குள் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். அதேபோல் மாலை 4:45 மணி முதல் 5.45 மணிக்குள் மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். முக்கியமாக ராகு காலம், எமகண்டம் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்.
நவராத்திரி பூஜை மூன்றாம் நாள்:
அம்பாள்: வராகி அம்மனாக அலங்கரித்து வழிபட வேண்டும்.
கோலம்: மலர் வகை கோலம் போட்டு வழிபட வேண்டும்.
மலர்கள்: மலர்களில் சம்பங்கியும், இலைகளில் துளசி.
நைவேத்தியம்: சர்க்கரை பொங்கலும், சுண்டல் வகையில் காராமணி சுண்டலும் படைத்து வழிபட வேண்டும்
பாட வேண்டிய ராகம் காம்போதி.
பழங்கள்: பழங்களில் பலாப்பழம் படைக்க வேண்டும்.
இந்த நாளில் அன்னைக்கு நீல நிற வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும். நாமும் நீல நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.
வாராகி அம்மன் மந்திரம்:
வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ