நவராத்திரி பண்டிகை நான்காம் நாள் சிறப்பு வழிப்பாடு: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்படும் ஐராப்பு பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri 2023) பண்டிகை, அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அன்று  கோலாகலமாக தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி பண்டிகை நான்காம் நாள் 2023:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். .


மேலும் படிக்க | Blue Aadhaar Card: நீல நிற ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:
நவராத்திரியின் (Navaratri) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.


​நவராத்திரி பூஜை:
நவராத்திரியின் நான்காம் நாள் (Navratri Day 4) அதாவது அக்டோபர் 18 ஆம் தேதி காலை 9:15 மணி முதல் 10.15 மணி வரையிலான நேரத்திற்குள் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். அதேபோல் மாலை 4:45 மணி முதல் 5.45 மணிக்குள் மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். முக்கியமாக ராகு காலம், எமகண்டம் நேரத்தில் பூஜை செய்ய வேண்டாம்.


நவராத்திரி பூஜை நான்காம் நாள்:
அம்பாள்: மகாலட்சுமியை அலங்கரித்து வழிபட வேண்டும். 
கோலம்: மஞ்சள், அரிசி கலந்த அட்சதை அரிசியை கொண்டு, படிக்கட்டுகள் வடிவில் கோலம் போட்டு வழிபட வேண்டும்.
மலர்கள்: ஜாதி மல்லி, கதிர்பச்சை என்கிற செடியின் இதழால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம்: கதம்ப சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்
பாட வேண்டிய ராகம் பைரவி.
பழங்கள்: பழங்களில் கொய்யாப்பழம் படைக்க வேண்டும். 


இந்த நாளில் அன்னைக்கு கறுநீல நிற வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும். நாமும் கறுநீல நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.


பயன்கள்:
கடன் தொல்லை தீரும். கடன் என்றால் மற்றவர்களிடம் வாங்கியிருக்கும் கடனை தீர்ப்பதோடு, பிறவி கடனும் தீரும். மகா லட்சுமி என்றாலே தெரியும், செல்வங்களுக்கான தேவி. இவரை வழிபட்டு நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் பெறலாம்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது லாட்டரி.. எஃப்டி வட்டி விகிதங்களை வாரி வழங்கும் வங்கிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ