இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சிறுமான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஹஜ் புனித பயண ஏற்பாடுகள் குறித்து தனியார் சுற்றுலா நிறுவன பொறுப்பாளர்களுடன், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறோத்து தெரிவிக்கையில்., "இந்திய ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.40 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதேபோல் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் 60,000 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் எந்தவித மானியமும் இன்றி ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிதார்.


அதேப்போல் 2,340 பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் பேரில் 48% பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும். முதற்கட்டமாக வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையும் விமானங்கள் மூலம் பயணிகள் ஹஜ் புனித பயணத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவித்தார்.


இந்திய பயணிகளுக்காக மெக்காவில் 11 இடங்களிலும், மெதினாவில் 3 இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார்.