டெல்லி: மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. எப்படி? எங்கே? எந்த இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம் என்று பார்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5 ஆம் தேதி 2019-2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது போனி புயல் ஏற்பட்டதால், புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மே 20 ஆம் தேதி நடைபெற்றது. 


இந்தியா முழுவதும் நீட் தேர்வு சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். 


இந்தநிலையில், இன்று நீட் தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் காலை 10 மணி அளவில் வெளியாகவுள்ளது.