இந்திய விடுதலைப் போரில் மிக முக்கியமான தலைவரான சுபாஷ் சந்திர போஸின் 123-வது பிறந்ததின நாள் இன்று!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். இன்று இவரின் 122-வது பிறந்தநாள் தினம். இந்த உலகை விட்டு மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், அவரின் மரணம் சம்பந்தமான பல சர்ச்சைகள் தொடர்கின்றன. 


1897 ஆம் ஆண்டு கட்டாக்கில் பிறந்த இவர் சிறுவயது முதலே பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். காங்கிரஸின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தராது என எண்ணியவர். இந்தியாவிற்கு என்று தனியான இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இதில் பெண்கள் படையின் தலைவராக கேப்டன் லட்சுமி நியமிக்கப்பட்டிருந்தார். அதி தீவிர கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர் ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் நாசியுடன் இணைந்து கொண்டு ராணுவத்தை வலுவாக கட்டமைத்தார்.


1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை விளக்கி பம்பாயில் அழுத்தமும் ஆவேசமும் மிக்க உரையொன்றை நிகழ்த்தினார் மகாத்மா காந்தி. அவ்வுரையில்தான் "வெள்ளையனே வெளியேறு'  என்ற முழக்கத்தையும், "செய் அல்லது செத்து மடி' என்ற பிரகடனத்தையும் உணர்ச்சிப் பெருக்கோடு வெளியிட்டார். அடுத்தநாள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மகாத்மா காந்தி, அவரின் மனைவி கஸ்தூர்பா, அவரின் தனிச் செயலாளர் மகாதேவ் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பண்டித நேரு, வல்லபபாய் படேல், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எவரும் எதிர்பாராத விதத்தில் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதிலுமுள்ள காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 


காங்கிரஸ் தீர்மானத்திற்குப் பின்னர், மகாத்மா காந்தியின் தீர்க்கமான உரைக்குப் பிறகு நாடே போர்க்களமானது. ஆனால், போராட்டத்தை வழி நடத்தும் தலைவர்கள் எவரும் வெளியில் இல்லை. மக்கள் தமக்குத் தாமே தலைமையேற்று நடத்திய இந்தப் போராட்டத்தை "ஆகஸ்ட் புரட்சி'  என்று வரலாற்று ஆய்வாளர்கள் வரையறை செய்துள்ளனர்.


காங்கிரஸ் தீர்மானத்திற்குப் பின்னர், மகாத்மா காந்தியின் தீர்க்கமான உரைக்குப் பிறகு நாடே போர்க்களமானது. ஆனால், போராட்டத்தை வழி நடத்தும் தலைவர்கள் எவரும் வெளியில் இல்லை. மக்கள் தமக்குத் தாமே தலைமையேற்று நடத்திய இந்தப் போராட்டத்தை "ஆகஸ்ட் புரட்சி'  என்று வரலாற்று ஆய்வாளர்கள் வரையறை செய்துள்ளனர்.


ஜப்பானில் தலைமறைவாகி இருந்த அவர் அங்கிருந்து தைவான் வழியாக இந்தியாவிற்கு வர முயற்சிக்கும்போது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது ஆனால் அது இன்னும் ஊர்ஜிதப் படாமல் இருந்து வருகிறது. இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.