கரன்சி நோட்டு சமீபத்திய செய்திகள்: 500 ரூபாய் நோட்டு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தால் இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது


100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. பல சமயங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லும்போது, ​​பலமுறை சிதைந்த நோட்டுகள் வருவதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் பதற்றம் அடைகிறார்கள். பல சமயங்களில் இந்த நோட்டுகள் எங்கும் செல்லுபடியாவதில்லை. எனினும், இந்த ரூபாய் நோட்டுகளை இனி எளிதாக மாற்றலாம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


புதிய வழிகாட்டுதல்கள்  வெளியிடப்பட்டுள்ளன


கிழிந்த, சேதமடைந்த இத்தகைய ரூபாய் நோட்டுகளை உங்கள் அருகிலுள்ள வங்கிக்கிளைக்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனுடன், 500 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதற்கான புதிய வழிகாட்டுதலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த நோட்டுகள் குறித்து பல செய்திகள் வைரலாக வந்து கொண்டிருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அதை அடையாளம் காணும் முறையை கூறியுள்ளது.


மேலும் படிக்க | கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? இலவசமாக மாற்றி கொள்ளலாம்! 


செல்லாத ரூபாய் நோட்டுகளை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என இங்கே காணலாம்: 


- உங்கள் ரூபாய் நோட்டு விளிம்பிலிருந்து நடு வரை கிழிந்திருந்தால், அது செல்லாது. 


- நோட்டு மிகவும் அழுக்காக இருந்தால் அல்லது அதில் மண் இருந்தால், அது செல்லாததாக கருதப்படும்.


- அதிகப்படியான உபயோகத்தால் நோட்டுகள் பலமுறை சேதமடைந்து போனால், அவை செல்லாததாகக் கருதப்படும்.


- இது தவிர, ரூபாய் நோட்டில் கிராஃபிக் மாற்றம் இருந்தால், அது செல்லாத நோட்டாகக் கருதப்படும்.


- நோட்டின் நிறம் மங்கினாலும், அது செல்லாததாகக் கருதப்படும்.


ரிசர்வ் வங்கி அளித்த உத்தரவு என்ன?


ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, உங்களிடம் பழைய அல்லது சிதைந்த 500 ரூபாய் நோட்டு இருந்தால், இப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அனைத்து வங்கிக்கிளைகளிலும் இந்த நோட்டுகளை மாற்றலாம். ஒரு வேளை வங்கிகள் அதை மாற்ற மறுத்தால், அதைப் பற்றி புகார் செய்யலாம்.


மேலும் படிக்க | உங்களுக்கும் அடிக்கலாம் ஜாக்பாட்..இந்த '2000' ரூபாய் நோட்டு இருந்தால் போதும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ