மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் LPG மானியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்களால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு  200 ரூபாய் மானிய தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9 கோடி பயனாளிகளுக்கு மாதம் ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) 200 ரூபாய் மானியம் வழங்கவுள்ளோம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.6100 கோடி  செலவாகும் என்றார்.


கோவிட் தொற்றுநோயின் பொருளாதார பாதிப்புகள் காரணமாக பிரதமர் உஜ்வாலா திட்டம் 2020   ஜூன் மாதம்  நிறுத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 


மேலும் படிக்க | ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் வெகுவாக குறைந்தது ஏன்... RBI கூறிய முக்கிய தகவல் 


கடந்த சில மாதங்களாக உள்நாட்டு மற்றும் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.200 மானியம் வழங்கப்படும்.


பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?


கிராமப்புற மற்றும் ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், மத்திய அரசு 2016 இல் 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' (PMUY) அறிமுகப்படுத்தியது. சமையல் எரிபொருளாக விறகு, நிலக்கரி, மாட்டு சாணம்  போன்றவற்றைப் பயன்படுத்தும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கி இந்த திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டது.


பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் நோக்கம் ஏழைக் குடும்பங்களுக்கு மானிய விலையில் சுத்தமான சமையல் எரிவாயு, அதாவது எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதாகும். ஏப்ரல் 25, 2022 அன்று உள்ள தரவுகளின் படி,  PMUY திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 9.17 கோடி எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


எல்பிஜி சிலிண்டர் மானியம் கீழ்கண்ட பிரிவில் வரும் வயது வந்த பெண்களுக்கு கிடைக்கும்


SC, ST குடும்பங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராம பகுதி), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY), தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுகள் மற்றும் நதி தீவுகளில் வசிக்கும் மக்கள், SECC குடும்பங்கள் (AHL TIN), 14-புள்ளி அறிவிப்பின்படி ஏழை குடும்பம் ஆகியோருக்கு சிலிண்டர் மானியம் கிடைக்கும். 


எல்பிஜி சிலிண்டர் மானியத்தைப் பெற விண்ணப்பதாரர் வேறு விதமான எல்பிஜி இணைப்புகள் எதையும் வைத்திருக்கக் கூடாது.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, மே 31-க்குள் அறிவிப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR