புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு
சென்னையில் 31 ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளனர்.
சென்னையில் 31 ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளனர்.
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிற நிலையில் சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.
சென்னை மாநகரில் அண்ணாசாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட அரங்கேறும், மேலும் பண்ணை வீடுகள், கடற்கரையையொட்டி உள்ள விடுதிகள் ஆகியவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துக்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. இதுபோன்ற பல கட்டுப்பாடுகள் வழக்கம் போல இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலும் விதிக்கப்பட உள்ளன.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஒவ்வொரு ஆண்டும் போலீசார் வெளியிடுவார்கள். இந்த ஆண்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகள் தயாராகி உள்ளன. வருகிற நாட்களில் இதுதொடர்பான தகவல்கள் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
மெரினா கடற்கரையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31-ந்தேதி அன்று இரவு ஒரு லட்சம் .பேர் வரையில் கூடுவார்கள். இரவு 12 மணியானதும் ஹேப்பி நியூ இயர் கோஷமிடுவார்கள்.
இந்நிலையில் சென்னை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்கும் வகையில் தடுப்புகளையும் அமைக்க உள்ளனர்.
31 ஆம் தேதி இரவு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசாரும் ஆயத்தமாகி உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.