உபர் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு இலவசம்
பயணிகளின் பாதுகாப்பிற்காக இலவச காப்பீடு (Insurance) திட்டத்தை அறிமுகப்படுத்தியா உபர் நிறுவனம்.
புதுடெல்லி: உபர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயன்செய்பவர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பிற்காக இலவச காப்பீடு (Insurance) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்கப்படும். விபத்துக்கு உள்ளாகும் பயணிக்கு, ஓபிடி (OPD) சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்சம் வரையும், ஒருவேளை மரணம் நிகழ்ந்தால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். இந்த காப்பீடு பாரதி ஆக்ஸா பொது காப்பீடு (Bharti AXA General Insurance) மற்றும் டாடா ஏ.ஐ.ஜி பொது காப்பீடு (Tata AIG General Insurance) நிறுவனங்கள் இணைந்து வழங்கும். உபேர் பயணத்தில் இருக்கும்போது ஏற்படக்கூடிய விபத்தின் காரணமாக மட்டும் தான் காப்பீடு வழங்கப்படும்.
இந்த இலவச காப்பீடு முயற்சி பயணிகளின் பாதுகாப்பிற்க்காக உபர் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கையாகும். இதுதொடர்பாக, உபேர் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் மத்திய செயல்பாட்டுத் தலைவர் (Rides) தலைவர் பவன் வைஷ் (Pavan Vaish) கூறியது, “உபேர் வாகானத்தில் ரைடர்ஸ் அனைவரின் பாதுகாப்பும் எங்கள் வணிகத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். அவர்களின் நல்வாழ்வு தான் எப்போதும் எங்களின் முன்னுரிமையாக இருக்கும். இந்த முயற்சியை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கிறோம், பயணம் செய்யும்போது அவர்களுக்கு அதிக பாதுகாப்பையும் உறுதியையும் தருகிறோம் என அவர் கூறினார்.
இந்த காப்பீடு திட்டத்தில் உபர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஒருவேளை விபத்து ஏற்பட்டால், விபத்து நடந்த நாளிலிருந்து 60 நாட்களில் காப்பீடு பணத்தை பெறலாம்.
> பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் உபேர் இலவச விபத்து காப்பீட்டை வழங்குகிறது.
> இந்த காப்பீடு 2 சக்கர வாகனம், 3 சக்கர வாகனம் மற்றும் காரில் பயணம் செய்பவர்களுக்கு கிடைக்கும்.
> தற்செயலான மரணம் நிகழ்ந்தால் 5 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்சம், ஓபிடி 50 ஆயிரம் வரை வழங்கப்படும்.
> பயணம் தொடங்கியதிலிருந்து பயணம் முடிவடையும் வரை காப்பீடு செல்லுபடியாகும்.
> காப்பீட்டிற்காக, பாரதி ஆக்சா மற்றும் டாடா ஏ.ஐ.ஜி உடன் இணைந்துள்ளார்.
> பயணம் செய்பவர்கள் நேரடியாக காப்பீடு திட்டத்தில் இணைத்துக்கொள்ளப் படுவார்கள்.