பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற ஜன்க் ஃபுட் வகைகளை கல்லூரிகளில் விற்பதற்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மொபைல் போன் உபயோகிப்பதற்கு தடைவிதித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அதிரடி உத்தரவால் பேராசிரியர்கள் மகிழ்ச்சியடைவார்களே தவிர மாணவர்கள் பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டனர்.  


தற்போதைய இளைஞர்களுக்கு இணையதளம் தான் எல்லாமே என்று இருக்கும் பட்சத்தில் செல்போனுக்கு தடை விதித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த பேரதிர்ச்சியை தந்துள்ளது மத்திய மனித வளத்துறை அமைச்சகம். இந்த உத்தரவால் ஜன்க் ஃபுட் பிரியர்கள் அனைவரும் பேரதிர்ச்சியில் உள்ளனர்.


இனி கல்லூரி வளாகங்களில் ஜன்க் ஃபுட் உணவு வகைகளை விற்பதற்கு தடைவிதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய மனித வளத்துறை அமைச்சகம். இந்நிலையில், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜன்க் ஃபுட் உணவுகளை மாணவ, மாணவிகள் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியம் சீக்கிரமாகவே கெட்டு விடுவதாகவும், உண்ணும் உணவே மருந்தாகிவும் என்றும் தெரிவித்துள்ளது.


உடல் எடையை கூட்டக்கூடிய, உடல்நலத்தை கெடுக்கக்கூடிய, பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும் இது போன்ற ஜன்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் இந்த வகைஜன்க் ஃபுட் உணவு மற்றும் அதிகம் இனிப்பு கலந்த கூல்டிரிங்க்ஸ் விற்கவும் பல்கலைக்கழக மானிய குழு தடை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 



மேலும், இந்த விதிமுறையை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகழகமும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளது..!