நீங்கள் ஒவ்வொரு மாதமும் Netflix, Amazon Prime மற்றும் Disney Hotstar போன்ற OTT தளங்களுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிப்பவர்களாக இருந்தால், அந்த பணத்தை மிச்சப்படுத்த இப்போது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், நீங்கள் பணம் செலவழிக்காமல் இந்த தளங்களில் இலவசமாக படங்களைப் பார்க்கலாம். இந்த செய்தியைப் படித்த பிறகு நீங்கள் நம்பாமல் இருக்கலாம், அதெப்படி சாத்தியம்.. இது உண்மையா இல்லையா என்ற கேள்வி கூட எழலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் ஆண்டு முழுவதும் OTT தளங்களை நீங்கள் எப்படி அனுபவிக்கலாம் என்பதை இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த இலவச சேவையை எப்படி செயல்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தத் திட்டத்தில் பலன்கள் கிடைக்கும்:
நீங்கள் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த இலவசச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ. 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இலவசமாக OTT இயங்குதளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதம். இந்த திட்டத்தை நீங்கள் ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தினால், நீங்கள் Netflix, Amazon Prime மற்றும் Disney Hotstar ஆகியவற்றின் பலன்களை இலவசமாகப் பெறுவீர்கள்.


ALSO READ | தொடர்ந்து ஸ்டார் ஹீரோ படங்களை வாங்கி குவிக்கும் NETFLIX!


இந்த திட்டத்தின் சிறப்பு என்ன:
ஜியோ போஸ்ட்பெய்டின் ரூ.399 திட்டமானது, நெட்ஃபில்க்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவச நன்மைகளுடன் 75 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. நீங்கள் ஆண்டு முழுவதும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினால், OTT இயங்குதளங்களை ஆண்டு முழுவதும் இலவசமாகப் பார்க்கலாம். மேலும் OTT தளங்களின் சந்தாவை நீங்கள் தனியாக வாங்க வேண்டியதில்லை.


இந்த திட்டங்களிலும் இலவச சலுகைகள் உள்ளன:
ரூ.399 மட்டுமல்ல, ரூ.599, 799, 999 மற்றும் ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் இந்த இலவச ஓடிடி சலுகை வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப திட்டத்தை தேர்வு செய்து சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ALSO READ | டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து படங்களை வெளியிடும் Disney+ Hotstar!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR