கல்யாணம், செக்ஸ், குழந்தை என எதுவும் வேண்டாம்; சிங்கிள்ஸ் வாழ்க்கை முறையே மகிழ்ச்சியாக உள்ளதென்ற முடிவுக்கு தென் கொரிய பெண்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டேட்டிங் இல்லை, செக்ஸ் இல்லை, திருமணம் இல்லை, குழந்தைகளும் இல்லை: உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் வீதத்தை எதிர்த்துப் போராடுவதால், தனிமையில் இருக்க சபதம் செய்யும் இரண்டு தென் கொரிய யூடியூபர்கள் கிழக்கு ஆசிய நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்றவற்றுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்துத் தரும் கல்யாணத்தை வெறுப்பதாக அந்நாட்டு பெண்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ’No Marriage’ இயக்கத்தை முதன்முதலில் இரண்டு பெண்கள் தங்களது யூட்யூப் தளத்தில் அறிமுகம் செய்தனர். சில மாதங்களிலேயே இந்த இயக்கத்தின் கீழ் 37 ஆயிரம் பெண்கள் இணைந்தனர். இந்த இயக்கத்தின் மூலம் ஆண்கள், திருமணம், செக்ஸ், குழந்தைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கலாம் என சக பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்கு பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவும் கிடைக்கிறதாம்.


UN அறிக்கையின் அடிப்படையில் தென்கொரியாவில் மக்கள் தொகை அதிவேகத்தில் வீழ்ந்து வருகிறதாம். இது அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையாக அந்நாட்டு அரசு பாலின சமத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளதாம். தற்போது தென்கொரிய பெண்களில் வெறும் 44 சதவிகிதத்தினர் மட்டுமே திருமண ஆசை உள்ளவர்களாக இருப்பதாக அந்நாட்டு அரசின் ஆய்வு ஒன்று கூறுகிறது.