OMG.. நான் College படிக்கும்போது இப்படி ID Card கொடுக்கலையே!
பிரபல பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஹாலிவுட் படங்களில் வரும் பிரபல மந்திரவாதிகள் போன்று சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது!
பிரபல பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஹாலிவுட் படங்களில் வரும் பிரபல மந்திரவாதிகள் போன்று சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது!
ஐக்கிய நாடுகளின் டெரோயிட் நகரில் அமைந்துள்ளது பிரபல North Farmington High School. 1961-ஆம் துவங்கப்பட்ட இந்த பள்ளியில் இதுவரை பல்லாயிரம் மாணவர்களை திறம்பட உருவாக்கி வெளியுலகிற்கு அனுப்பியுள்ளது. இப்பள்ளி கற்றுத்தரும் படிப்பினால் மட்டும் புகழ்ச்சி அடைந்துவிடவில்லை, கடைப்பிடிக்கப்படும் சில விசித்திர வழக்கத்தினாலும் புகழ்ச்சி அடைந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு புது முயற்சியினை இப்பள்ளி மேற்கொண்டு உலக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆம்... அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஹாலிவுட் படங்களில் வரும் பிரபல மந்திரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் அடைய அட்டையினை வழங்கியுள்ளது. இந்த புகைப்படங்களை உரிய மாணவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தினில் பகிர்ந்துள்ளனர்.