உபர் நிறுவனம் தனது டிரைவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் டிப்ஸ் வழங்கியுள்ளதாக தகவல்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாக்ஸி நிறுவனமான உபர் முன்பதிவு செய்யும் செயலியிலேயே டிரைவர்களுக்கு டிப்ஸ் தரும் வசதியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, உபர் நிறுவனம் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான பேமெண்ட்களை தனது டிரைவர்களுக்கு டிப்ஸாக பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 50 மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கியுள்ளது உபர்.


பயணத்தின் இடையே ரேட்டிங் மற்றும் டிப்ஸ் தரும் வசதியை மே மாதம் அறிமுகப்படுத்தியதில் இருந்து, டிப்ஸ் தருவது 30% அதிகரித்துள்ளதாக தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உபர் ப்ராடெக்ட் மேனேஜர் துருவ் தியாகி. டிப்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஏப்ரல் வரை டிரைவர்கள் 500 மில்லியன் டாலர் டிப்ஸ் பெற்றுள்ளதாகவும், 2016 ஐ ஒப்பிடும் போது 2017-ல் சராசரியாக 8% டிப்ஸ் அதிகரித்துள்ளதாகவும் லிப்ட்(Lyft) நிறுவனம் அறிவித்துள்ளது.


உபர் அளவிற்கு லிப்ட் நிறுவனத்திற்கு பெரிய அளவிலான சந்தை இல்லை. லிப்ட் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே செயல்படும் நிலையில், உபர் நிறுவனம் US, கனடா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, கிழக்காசியா, தெற்காசியா, தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தனது சேவையை வழங்குகிறது. எனவே அதிக கண்டங்கள் மற்றும் நகரங்கள் என்பதால் டிப்ஸ்க்கான வாய்ப்புகள் அதிகம்.


உபர் டிரைவர்கள் அதிக டிப்ஸ்களை சால்ட் லேக் சிட்டி, உட்டா, சான் அந்தோனியா, டெக்சாஸ், கான்சாஸ் சிட்டி, மோ, நியூ ஓர்லீன்ஸ் மற்றும் நாஷ்வில்லே, டென் போன்ற நகரங்களில் இருந்து பெறுகிறது. அதே நேரம் லிப்ட் நிறுவனத்தின் நியூயார்க் சிட்டி, அட்லாண்டா, டெட்ராய்டு, டல்லாஸ், சான் ஜோஸ், மியானாபோலிஸ் மற்றும் வெஸ்ட்சீஸ்டர் கவுண்டி நகர பயணிகள் பெருந்தன்மையாக இருந்துள்ளனர். 


எந்த நேரத்தில் அதிகப்படியான டிப்ஸ் கிடைத்துள்ளது என பார்த்தால், மக்கள் பெரும்பாலும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தான் அதிக டிப்ஸ் அளித்துள்ளனர். அதிலும் ஆச்சர்யமளிக்காத வகையில், வியாக்கிழமை இரவு 8:12 மணிக்கும், சனிக்கிழமை இரவு 10:33 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 5:17மணிக்கும் அதிக டிப்ஸ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!