நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, உணவு விடுதிகளில் 10 சதவீதம் தள்ளுபடி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் வாக்களிக்கும் அனைவருக்கும் தமிழகத்தில் உள்ள சரவண பவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் உணவு விடுதிகளில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு உணவு விடுதிகள் சங்கம் அறிவித்துள்ளது. 


சென்னையில் மட்டும் சுமார் 1200 உணவு விடுதிகளில் இந்த சலுகை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மாலை 6 மணிக்கு மேல் என்றும், வாக்காளர்கள் தங்கள் விரல்களில் உள்ள மை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து இந்த தள்ளுபடியை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இது ஒரு சிறிய முயற்சி என்றும், நமது தேசத்திற்காக இதனை செய்ய அனைத்து ஓட்டல் உரிமையாளர்களும் முன்வந்துள்ளதாகவும், தமிழ்நாடு உணவு விடுதிகள் சங்கச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  மேலும், திருச்சியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாக்காளர்களுக்கு இலவச துணிப்பை வழங்குகிறது எனவும் சீனிவாசன் தெரிவித்தார்.