குழந்தைகள் தினத்தையொட்டி மும்பை பள்ளி மாணவி வரைந்த ஓவியத்தை கொண்டு கூகுள் தனது டூடுள் பக்கத்தை உருவாக்கி உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதியை நாடுமுழுவதும் நாம் குழந்தைகள் தினமாக கொண்டடி வருகிறோம். ஜவஹர்லால் நேரு, 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.  


இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ’டூடுள்ஃபார் கூகுள்’  என்ற போட்டியை நடத்தியது. ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்பை நினைவூட்டும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுலை வெளியிடும். நாள் தோறும் பல சுவரஸ்யங்களுடன் வெளியிடப்படும் இந்த டூடுல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.


இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. 


இதற்கான போட்டி சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பையின் பிங்க்லா ராகுல் வெற்றிபப் பெற்றார். இந்தாண்டு க்கான தலைப்பாக “What inspires me?” கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி வெற்றி பெற்ற டூடுல் விண்வளியை மையமாக வைத்து வரையப்பட்டுள்ளது.