ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி மூலம் ரூ.95,610 கோடி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதித்துறை செயலர் ஹாஸ்முக் ஆதியா தகவல் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அமுல்படுத்தியது மத்திய அரசு. 


இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்த சட்டம் அமல்படுத்தபட்டது முதல், நாடு முழுவதும் இருந்த 12க்கும் அதிகமான வரி விதிப்பு சட்டங்கள் முடிவுக்கு வந்தன.


ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டிலிருந்து வசூலான தொகை எவ்வளவு என்பதை வரித்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.95,610 கோடி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதித்துறை செயலர் ஹாஸ்முக் ஆதியா தகவல் தெரிவித்தார்.


டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் மத்திய நிதித்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா பேசினார். ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூலை 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


கடந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வருமானத்தின் சராசரி 89,885 கோடி ரூபாயாக இருந்தது. போலி பில்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டால், வருமானம் 


2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்கு உதவும் இ-வே பில் என்னும் இணையவழி ரசீது பயன்பாடு அமல்படுத்தப்பட்டதாலும் ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடி ரூபாயை தொட்டு சாதனை படைத்தது. 


கடந்த நிதி ஆண்டில் சராசரியாக மாதத்துக்கு ரூ.90,000 கோடியாக வந்திருந்த நிலையில் மே மாத வசூல் ரூ.94,016 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


என்று கூறினார்.