திருமணமாகாதவர் ஒன்றாக தங்குவதற்கு அனுமதியில்லை என்ற வித்தியாசமான கட்டளை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள இலோஇலோ என்ற நகரில் எப்ராத் என்ற தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் திருமணமாகாதவர் ஒன்றாக தங்குவதற்கு அனுமதியில்லை என்ற வித்தியாசமான விதி பின்பற்றப்படுகிறது. 


திருமணத்திற்கு பின் வேறு ஒரு உறவை அந்த விடுதி நிர்வாகம் வெறுப்பதால் "குறைந்த நேரம்" தங்குவதையும் திருமணமாகாதவர்கள் ஒன்றாக ஒரே அறையில் தங்குவதையும் அந்த ஓட்டல் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மேலும் விடுதியில் தங்க திருமணமானவர்கள் வந்தாலும் அவர்கள் திருமணமானவர்கள் என்பதற்கான சான்றாக திருமண புகைப்படம், பதிவு சான்று, திருமண மோதிரம் என ஏதாவது ஒன்றை சான்றாக காட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. 



தற்போது அந்த விடுதி நிர்வாகம் ரூம்களை புக் செய்ய உள்ள விதி பட்டியல் அடங்கிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை முதலில் பதிவிட்டது விடுதி நிர்வாகம் தான். இது குறித்து அவர்கள் விளக்கம் சொல்லும் போது "இதை நாங்கள் விளம்பரத்திற்காக பதிவிடவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த விதியை முன்னரே தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே பதிவிட்டோம். நாங்கள் இந்த விதியை கடந்த 6 ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறோம்" என கூறினர்.