இந்தியாவில் பேச்சு வழக்கத்தில் இருக்கும் ஆங்கில வார்த்தையான Chuddies என்னும் வார்த்தையினை Oxford ஆங்கில அகராதியில் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் பிரிட்டீஸ் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொல்லான சுட்டீஸ் (Chuddies) என்னும் வார்த்தையினை பிரபல Oxford அகராதியில் இணைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் உள்ள சொற்கள் மற்றும் புதிதாக உருவாகும் சொற்களுக்கு விளக்கமளித்து, ஆக்ஸ்போர்டு சொல்லகராதியில் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவது வழக்கம். 


அந்தவகையில், தற்போது இந்தியாவில் பொதுவாக வழக்கதில் இருக்கும் ஒரு வார்த்தை Oxford அகராதியில் இணைக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் அரைகால் டிரவுசரை சுட்டீஸ்(Chuddies) என சில பகுதிகளில் குறிப்பிடுகின்றனர். இந்த சொல் தற்போது ஆக்ஸபோர்டு அகராதியில் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த அகராதியில் இணைக்கப்பட்ட 650 பிராந்திர மொழிச் சொற்களில் ஒன்றாக இது  இணைக்கப்பட்டுள்ளது. 


கடந்தாண்டு முதல் பிராந்திர மொழிச் சொற்களை Words Where You Are-ன் அடிப்டையில் Oxford தனது அகராதியில் இணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.