பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களில் இந்தியா பீரங்கித் தாக்குதலை நடத்திய ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான தபால் அஞ்சல் சேவையை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை குறைத்து, இந்தியா சர்வதேச விதிமுறைகளுக்கு இச்செயல் முரணானது என்று குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.


நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து தெரிவிக்கையில்., "பாகிஸ்தானின் முடிவு நேரடியாக சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது. என்றபோதிலும் பாகிஸ்தான் என்றும் பாகிஸ்தான் தான்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில்., பாகிஸ்தான் "எந்த முன் அறிவிப்பும் அல்லது தகவலும் இல்லாமல் தபால் துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.


(PTI உள்ளீடுகளுடன்...)