பேடிஎம் Wallet-ல் இருந்து வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புவது எப்படி?
பேடிஎம் Wallet-ல் இருந்து வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
யுபிஐ செயலி பயன்பாடு அதிகரித்த பின்னர், பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். பேடிஎம்மில் இருக்கும் கூடுதல் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பு மக்களிடம் அதிக நம்பிக்கையை பெற்றிருப்பதால், இந்த செயலியை அதிகம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
க்யூ ஆர்கோட் மற்றும் மொபைல் எண் மூலம் பேடிஎம் செயலியில் எளிதாக நீங்கள் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். அதேபோல், பேடிஎம்மில் Wallet-ம் இருக்கிறது. இதில் இருக்கும் பணத்தை வைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை இன்னும் எளிதாக மேற்கொள்ள முடியும். இணைய வங்கியை பயன்படுத்தாமல் நேரடியாக பேடிஎம் Wallet-ல் இருக்கும் பணத்தை வைத்து கட்டணங்களை செலுத்த முடியும். அதேநேரத்தில் அந்த Wallet-ல் இருக்கும் பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கும் மாற்றிக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க | ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா, அப்போ உடனே இத படிங்க
பேடிஎம் Wallet-ல் இருந்து வங்கி கணக்குக்கு பணம் மாற்றுவது எப்படி?
* உங்கள் ஸ்மார்ட்போனில் PAYTM செயலியை திறக்கவும். அந்த செயலி உங்களிடம் இல்லையென்றால் ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
* அதில் MY Paytm பிரிவின் கீழ், Wallet ஆப்சனை கிளிக் செய்யவும்.
* ஸ்கிரீன் மேற்புறத்தில் கிடைக்கும் வங்கி விருப்பத்திற்கு ஏற்ப பரிமாற்ற ஆப்சனை கிளிக் செய்யவும்
* நீங்கள் மாற்ற விரும்பும் தொகையை உள்ளிட்டு கன்டினியூ கொடுக்கவும்
* பின்னர், உங்கள் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயரை உள்ளிட்டு Continue பொத்தானைத் கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு மேலும் சரிபார்ப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும்.
* இறுதியாக, அனைத்து பண பரிமாற்ற விவரங்களும் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்
* பரிவர்த்தனை முடிந்ததும் பெறுநரின் வங்கி கணக்கு விவரங்கள் PAYTM வாலட் பிரிவில் சேமிக்கப்படும், இது பயனர்கள் எதிர்காலத்தில் மீண்டும் பணத்தை அனுப்ப வேண்டுமானால் விரைவில் அனுப்ப உபயோகமாக இருக்கும்.
மேலும் படிக்க | Ration card Scheme: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ