தீபாவளி: வீட்டில் குபேர பூஜை செய்தால் கஷ்டங்கள் எல்லாம் விலகும்..!
தீபாவளி நாளில் வீட்டில் குபேர பூஜை செய்தால் கஷ்டங்கள் எல்லாம் விலகி, மகா லட்சுமியின் அருளை பெறுவீர்கள். குபேர பூஜை செய்ய உகந்த நேரம், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை பார்க்கலாம்.
தீபாவளி வழிபாடு
தீபாவளி நாளில் இருள் நீங்கி எல்லோரது வாழ்விலும் ஒளி பெருகும் என்பது ஐதீகம். அதற்கேற்ப மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் குளியலிட்டு, புத்தாடை அணிந்து வீட்டின் பூஜை அறையில் கடவுளை அலங்கரித்து குடும்பத்துடன் வழிபட்டு, ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள். இந்த மகிழ்ச்சி ஆண்டுதோறும் நீடித்திருக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம். அதற்காக சிறப்பு வழிபாடும் இருக்கிறது. அந்த சடங்குகளை முறைப்படி செய்தால் குபேரனின் அருளைப் பெற்று பண கஷ்டம் நீங்கி, மகாலட்சுமியின் அருளோடு சிறப்புடன் இருக்கலாம். அதற்கான வழிபாட்டு முறைகளும், குபேர பூஜை செய்வதற்கான நல்ல நேரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிக்க | நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!
குபேர பூஜை செய்ய வேண்டிய நேரம்
தீபாவளி திருநாள் இந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதிகாலை எழுந்து 6 மணிக்குள் எண்ணெய் குளியலிட்டு காலை வழிபாட்டை முடித்து குடும்பத்துடன் இனிப்புகள் பறிமாறி மகிழ்ச்சியாக இருக்கலாம். அதேநேரத்தில் செல்வங்கள் பெருகி, பணக்கஷ்டம் நீங்க மாலையில் குபேர பூஜை செய்ய உகந்த நேரம். மாலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் குபேர பூஜை செய்ய உகந்த நேரம்
குபேர பூஜை செய்யும் முறை மற்றும் நன்மைகள்
குபேர பூஜை செய்தால் வீட்டில் இருக்கும் பணக் கஷ்டம் நீங்கும். தொழில் விருத்தியாகும். முடங்கியிருக்கும் தொழில்கள் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்பது ஐதீகம். இது நாள் வரை தொழிலால் பட்ட கஷ்டங்கள் நீங்கி, குடும்பத்தில் ஏற்பட்ட இன்னல்கள் விலகிடும். குபேர பூஜை செய்யும் நேரத்தில் வீட்டில் லட்சுமி தேவியின் படம் மற்றும் குபேரனின் படங்களை வைத்து விளக்கேற்றி வீட்டில் இருக்கும் ஆபரணம் ஏதேனும் ஒன்றை அணிவித்து மகாலட்சுமிக்கு உரிய அஷ்டோத்திரம் படித்துப் பூசை செய்வது அவசியம். வில்வம் கொண்டு பூஜை செய்தால் செல்வம் சேரும். இந்த நாளில் பூஜை முடித்து ஏழைகளுக்குத் தேவையான உடை, உணவு ஆகியவற்றை தானம் செய்தால் சகல பாவங்களும் விலகிப் புண்ணிய பலன்கள் பெருகும். எப்போதும் ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்.
மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமியின் பிறந்தநாள்: தந்தேராஸ் நாளில் செய்ய வேண்டிய குபேர பூஜை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ