உங்கள் ஏரியாவில் Petrol Diesel Latest Price-ஐ எவ்வாறு தெரிந்துக்கொள்வது
வீட்டில் இருந்தபடியே உங்கள் நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை (Petrol Diesel Price) குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் ஒரே ஒரு SMS அனுப்புவது மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
Today Petrol Diesel Price: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை தினந்தோறும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் புதிய விலை பயன்பாட்டுக்கு வருகிறது. வீட்டில் இருந்தபடியே உங்கள் நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை (Petrol Diesel Price) குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் ஒரே ஒரு SMS அனுப்புவது மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
உங்கள் மொபைலில் இருந்து எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதன் மூலம் மட்டுமே உங்கள் நகரத்தில் பெட்ரோல் விலை (Today Petrol Diesel Price) பற்றிய தகவல்களைப் பெற முடியும். எந்த எண்ணில் நீங்கள் SMS அனுப்ப வேண்டும் என்ற தகவலை உங்களுக்குத் தருகிறோம்.
மொபைல் போன் மூலம் 9224992249 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் "ஆர்எஸ்பி <ஸ்பேஸ்> (RSP <space>) டீலர் கோட் ஆஃப் பெட்ரோல் பம்ப்". இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அனைத்து பெட்ரோல் பம்புகளின் டீலர் குறியீடுகள் வேறுபட்டவை மற்றும் டீலர் குறியீடு பெட்ரோல் பங்க் வளாகத்தில் எழுதப்பட்டுள்ளது.
உங்கள் வசதிக்காக, இந்தியன் ஆயில் இணையதளத்தில் சில ஒப்பந்தக் குறியீடுகளை செய்திகளின் நடுவில் ஒரு படமாக வைத்துள்ளோம். உங்கள் நகரக் குறியீட்டைப் பார்த்து அதைப் பயன்படுத்தலாம். எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும் தகவல் மூலம் இன்றைய விலையை குறித்து மட்டுமே தெரிந்துக்கொள்ள முடியும்.
ALSO READ | உலகின் 'மலிவான' மின்சார பைக்.... விலையை கேட்டு அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!!
எஸ்எம்எஸ் தவிர, இந்தியன் ஆயில் (Indian Oil) மொபைல் பயன்பாடும் உள்ளது. இந்த மொபைல் பயன்பாட்டை (IndianOil ONE Mobile App) உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்குவதன் மூலம், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் குறித்த விவரங்களை காணலாம், அதே போல் எரிபொருள் விலையையும் (Fuel Prices) தெரிந்துக் கொள்ளலாம். இந்தியன் ஆயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, உங்களுக்கு மேலே தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன என்பதைத் தெரியப்படுத்துகிறோம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR