புதுடெல்லி: சுமார் 18 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்று அதிகரித்துள்ளன. அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் 18 நாட்களுக்கான நீண்ட இடைவெளிக்குப் பிறகு தினசரி விகித திருத்தத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 பைசாவும் டீசல் லிட்டருக்கு 31 பைசாவும் உயர்த்தப்பட்டது. தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை இப்போது லிட்டருக்கு ரூ .91.27 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .81.73 ஆகவும் உள்ளது. 


நாடு முழுவதும் பெட்ரோல் (Petrol) டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளுக்கான வரிவிதிப்பு மற்றும் மதிப்பு கூட்டு வரியின் (VAT) அடிப்படையில் விலைகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 


டெல்லியில் பெட்ரோல் விலையில் மத்திய அரசின் பங்கு லிட்டருக்கு ரூ .32.98 ஆகவும், விற்பனை வரி அல்லது மாநில அரசின் VAT-ன் பங்கு ரூ .19.55 ஆகவும் உள்ளது.


சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 93.15 ரூபாய்க்கும், டீசல் விலை 30 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


ALSO READ: Petrol diesel price today: மூன்றாவது நாளாக உயர்ந்தது விலை, உங்கள் ஊரில் என்ன விலை?


டீசலைப் பொறுத்தவரை, மத்திய கலால் வரி 31.83 ரூபாயும், வாட் ரூ .10.99 ஆகவும் சேர்க்கப்படுகிறது. இது தவிர, விலையில் ஒரு லிட்டருக்கு பெட்ரோலுக்கு குறைந்தபட்சம் ரூ .2.6 மற்றும் டீசலுக்கு ரூ .2 என்ற டீலர் கமிஷனும் அடங்கும்.


பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி திருத்தப்படுகின்றன.


கொரோனா வைரஸின் (Coronavirus) இரண்டாவது அலை நாட்டில் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விற்பனையை வெகுவாகக் குறைத்துள்ளது. தொற்று பரவுவதைத் தடுக்க போடப்பட்ட பல உள்ளூர் மற்றும் வெவ்வேறு இடங்களுக்கிடையிலான கட்டுப்பாடுகள் எரிபொருளுக்கான தேவையைக் குறைத்துள்ளன என்று பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


"கோவிட்டுக்கு முந்தைய அதாவது 2019 ஏப்ரல் மாதம் இருந்த எரிபொருள் தேவையை ஒப்பிட்டுப் பார்க்கையில், ஏப்ரல் மாத இறுதியில், ஒட்டுமொத்த எரிபொருள் தேவை சுமார் 7 சதவிகிதம் குறைந்துள்ளது" என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) சந்தைப்படுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலைய இயக்குநர் அருண் சிங் தெரிவித்தார்.


சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.92.90ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.86.35 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.


ALSO READ: முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR