சுற்றுச்சூழல் பாதுகாப்பாக சர்வதேச அளவில் பங்காற்றியவர்களுக்காக "சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்" விருது ஐ.நா அமைப்பு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் ஐ.நா., ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த விருது சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேரலை காணொளி:


 



இந்நிலையில், இன்று ஐ.நா., பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதினை வழங்கினார். இந்த விருது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, இது எனக்கு கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. 125 கோடி இந்தியர்களால் தான் இந்த விருது சாத்தியமாகி உள்ளது. இந்த விருதை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


 



இந்த விருது, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பது என்று உறுதி ஏற்று செயல்பட்டு வருவதற்காகவும் பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.