Pongal 2025 Kolam: பொங்கலுக்கு இந்த கோலங்களை போடுங்க, தெருவே திரும்பிப்பார்க்கும்
Pongal 2025 Rangoli Designs: இந்த பொங்கல் அன்று என்ன கோலம் போடுவது என்ற யோசனையில் நீங்களும் உள்ளீர்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பலவிதமான விடைகளை அளிக்கும்.
Pongal 2025 Rangoli Designs: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும். 4 நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கான ஏற்பாடுகளில் மக்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரித்து இந்த நன்னாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சங்கள் பல உள்ளன. சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துதல், உழவர்களுக்கு நன்றி செலுத்துதல், விவசாயத்திற்கு உதவும் விலங்குகளுக்கு நன்றி கூறுதல், புத்தாடை, பொங்கல் உட்பட இந்த நாட்களில் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகள், கரும்பு, பொங்கல் சிறப்பு கோலங்கள் என பொங்கலுக்கு சிறப்பு சேர்க்கும் இவை அனைத்திற்கும் தனி முக்கியத்துவம் உள்ளது.
பொங்கல் 2025 ரங்கோலி டிசைன்கள் பற்றிய தேடல் இன்று அனைவருக்கும் உள்ளது. பொங்கல் அன்று போடப்படும் கோலங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இந்த நன்னாளில் பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் கோலங்கள் போடப்படுகின்றன. எனினும் இன்றைய நவீன காலத்தில் மக்கள் பல கருத்துக்களை சார்ந்த 'தீம் கோலங்களையும்' போட்டு வீடுகளை அழகுப்படுத்துகிறார்கள்.
கோலம் போடும் இடத்தை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து அதில் வெள்ளை கோல மாவு கொண்டு கோலம் போட்டு, அதன் பின்னர் வண்ண நிறங்களால் அது அலங்கரிக்கப்படுகின்றது. மாவுக்கோலமாகவும், பொடிக் கோலமாகவும் தமிழ் கலாசாராத்தின் சாரமாய் தொடரும் கோலக் கலை தற்போது நவீன வடிவங்களையும் எடுத்துவிட்டது. மாக்கோலம், வண்ணக்கோலம், பூக்கோலம், 3-டி கோலம், அச்சுக்கோலம், பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட கோலம், கம்ப்யூட்டர் கோலம், மணிக் கோலம் ரங்கோலி என கோலாகலமாய் கொடிக்கட்டிப் பறக்கும் கோலங்கள் அக்காலம் முதல் இருந்து இக்காலம் வரை மாண்பு மங்காமல் நாள்தோறும் மலர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
பொங்கல் 2025 ரங்கோலி டிசைன்கள்
இந்த பொங்கல் அன்று என்ன கோலம் போடுவது என்ற யோசனையில் நீங்களும் உள்ளீர்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பலவிதமான விடைகளை அளிக்கும். இந்த கோலங்களை போட்டு பாருங்கள். பொங்கலன்று, சுவையான உணவால் வயிறு நிறைவது போல, உங்கள் கோலத்திற்கு கிடைக்கும் பாராட்டுகளால் மனமும் நிறையும்.
சமூக ஊடக பயனர்கள் சிலர் பகிர்ந்துள்ள கோலங்களின் டிசைங்காளை இங்கே காணலாம்:
பொங்கலன்று வீட்டிற்கு வரும் நபர்களை முதலில் வரவேற்பது கோலம் தான். இந்த கோலம் கண்டிப்பாக உங்கள் விருந்தினரை வியக்க வைக்கும். (Photo Credit : Instagram / rangolibysakshi_official)
பொங்கல் பானையை தாங்கி நிற்கும் இந்த கோலம் உங்கள் வீட்டு வாசலை வண்ணமயமாக்கும். (Photo Credit : Instagram / kolambyranji)
மயில் என்றாலே அழகு. கோலத்தில் மயில் இருந்தால், அந்த இடமே கோலாகலமாக இருக்காதா? (Photo Credit : Instagram / lakshana_family_salon)
பால் பொங்கி வழியும் பொங்கல் பானை கோலம். (Photo Credit : Instagram / thenmozhi_rangolis)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ