புதுடெல்லி: நீங்கள் தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கை வைத்திருந்து, நேரமின்மை காரணமாக தபால் நிலையத்திற்குச் செல்ல முடிவதில்லை என்றால், உங்களுடைய இந்த பெரிய பிரச்சினை இப்போது முடிந்துவிட்டது. வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அவை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளன. இந்த வசதியை நீங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை என்றால், தாமதிக்காமல் இதை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் நிலையத்திலும் நெட்பேங்கிங் வசதி


வங்கிக் கணக்குகள் உள்ளவர்கள் இணைய வங்கியியல் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த வசதி தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் எந்த இடையூறும் இல்லாமல் இந்திய அஞ்சல் இணைய வங்கியைப் பயன்படுத்தலாம். தபால் நிலையத்தின் (Post Office) நெட் பேங்கிங் மூலம் நீங்கள் பண பரிவர்த்தனை செய்யலாம். அதனுடன் RD, PF, NSC திட்டம் தொடர்பான அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்தே முடித்துக்கொள்ள முடியும்.



ALSO READ: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வெளியானது Good News!


தபால் அலுவலக நெட் பேங்கிங் செயல்முறை


1-அஞ்சல் துறை வலைத்தளமான www.indiapost.gov.in –ஐப் பார்வையிடவும்.


2- இடதுபுறத்தில் கொடுக்கப்பட்ட ஆப்ஷனில், ‘ஆன்லைன் வங்கி’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


3- பின்னர் ப்ரௌசரில் புதிய விண்டோவைத் திறக்க ‘re-direct’-க்கு OK கொடுக்கவும்.


4- உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்


5- நெட்பேங்கிங் பயனர் ஐடி உருவாக்கப்படவில்லை என்றால், விண்டொவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய பயனர் செயல்படுத்தல் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


6- கஸ்டமர் ஐடி மற்றும் கணக்கு ஐடியை உள்ளிட்டு தொடரவும்


7- உங்கள் கணக்கு தொடர்பான மேலும் சில தகவல்கள் கேட்கப்படும்.


8- தகவலை உள்ளிட்ட பிறகு கடவுச்சொல்லை உருவாக்குமாறு கேட்கப்படுவீர்கள்


9- கடவுச்சொல் உருவாக்கிய பிறகு நெட் பேங்கிங், அதாவது இணையவழி வங்கி வசதிக்கான பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் செயல்படுத்தப்படும். அதன் பிறகு நீங்கள் லாக் இன் செய்யலாம்.


10- இந்த செயல்முறையில் எந்தவொரு சிக்கல் இருந்தாலும், நீங்கள் 18004252440 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது dopebanking@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


நெட்பேங்கிங் பயன்படுத்துவதற்கான விதிகள்


தபால் அலுவலக இணைய வங்கி வசதியைப் (Net Banking) பயன்படுத்த சில நிபந்தனைகள் உள்ளன. தபால் அலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, KYC தொடர்பான ஆவணங்கள், செல்லுபடியாகும் ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கு தேவை. இது தவிர, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் பான் எண் ஆகியவற்றை கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நபர் மட்டுமே தனது கணக்கைப் பயன்படுத்த முடியும்.


ALSO READ: உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு போனால் இதை மட்டும் செய்யுங்க..


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR