Pradhan Mantri Awas Yojana: நாட்டு மக்கள் "அனைவருக்கும் வீடு" என்ற குறிக்கோளுடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ், கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் வழங்கப்படுகிறது. அதாவது நீங்கள் வீடு வாங்கும் போது, உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ரூ .2.67 லட்சம் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது. வட்டி மானிய நன்மை அசல் நிலுவையின் மீது வழங்கப்படும். சொந்த வீடு வாங்க வேண்டும் என விரும்பும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தின் கீழ் இப்போது வரை பயனடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டத்தின் கீழ் (Pradhan Mantri Awas Yojana) மானியம் பெற சில நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர், நீங்கள் மானியத்தைப் பெற முடியும். திருமணமான தம்பதிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் முன் பல கேள்விகள் மற்றும் குழப்பம் உள்ளது. எப்படி விண்ணப்பிப்பது? யார் விண்ணப்பிக்க முடியும்? எப்பொழுது விண்ணப்பிக்க முடியும்? போன்ற சந்தேகங்கள் எழுகின்றனர். அதற்கான தீர்வுகளை குறித்து பார்ப்போம். 


ALSO READ |  Prime Minister Awas Yojana பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று எப்படி சரிபார்ப்பது?


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) விதிகளின்படி, ஒரு பயனாளி குடும்பத்தில் கணவன், மனைவி, திருமணமாகாத மகன்கள் மற்றும்/அல்லது திருமணமாகாத மகள்கள் இருப்பவர்கள் விண்ணபிக்கலாம். திருமணமானவர்கள், தனியாகவோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ விண்ணப்பிக்கலாம். இருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்க முடியாது. இருவரில் ஒருவருக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். விண்ணப்பதாரரின் குடும்பத்துக்கு வேறெங்கும் சொந்த வீடு இருக்கக் கூடாது என்பது முக்கியம். மேலும் இந்த திட்டத்தின் கீழுள்ள பல்வேறு வகைகளின்படி வருமான தகுதி அடிப்படையைப் பொறுத்து கிடைக்கும் தன்மை மற்றும் வட்டி மானியத்தின் தொகையானது இருக்கும்.


அதாவது, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS), எல்ஐஜி (LIC), எம்ஐஜி 1 (MIG1), எம்ஐஜி 2 (MIG 2) என நான்கு வகையாக பிரித்துள்ளனர். இதன் அடிப்படையில் வட்டி மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில் EWS பிரிவினருக்கு 2,67 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.


ALSO READ |  முதலில் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும் PM Awas Yojana கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம்!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR