ஜாதகம் பார்க்க செல்பவர்கள் பொதுவாக கேட்கும் கேள்விகளில் ஒன்று வீடு வாகனம் வாங்கும் யோகம் உள்ளதா இல்லையா என்பது. ஜென்ம ராசியின் நான்காம் வீட்டிலிருந்து 11 ம் இடம் என்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் இடம் ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாம் வீடு தரும் பலன்களை நான்காம் வீட்டின் மூன்றாம் வீடாகிய ஆறாம் பாவகம் தடை செய்தால் ஒருவரால் வீடு வாங்க முடியாது.


 


ஆகவே ஒருவருக்கு சொத்து சுகம், வாகன வசதி வாங்கும் அதிர்ஷ்டம் (Luck to buy House) இருக்கிறதா என்பதை சொல்வது கட்டங்கள் தான்.  


ஜாதகத்தின் சதுர்த்தாம்சத்தில் ஏழாம் வீடு அசுப கிரகத்தினால் பாதிக்கப்படாமல் இருந்தால் ஒருவர் வீடு வாங்க இயலும்


மேலும் படிக்க | இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும்


ஜாதகத்தில் வீடு வாங்குவதற்கு நான்காம் வீட்டில் இருக்கும் கிரகம் முக்கியமானது.  செவ்வாய், வியாழன், வெள்ளி என மூன்று கிரகங்களும் நான்காம் வீட்டில் நன்கு அமைந்திருந்தால் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். 


பொதுவாக வெள்ளி, வியாழன், மற்றும் செவ்வாய் கிரகத்தின் அமைப்பைப் பொறுத்தே வீடு வாங்கும் யோகம் கணக்கிடப்படுகிறது. குரு, 1, 4, 8, 12 ஆகிய இடத்தில் இருந்தாலோ, அல்லது அந்த வீடுகளின் மீது குருவின் பார்வை பட்டாலோ வீடு வாங்கலாம்.


அதேபோல ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாய் இருந்தால் வீடு வாங்கும் எண்ணம் கைகூடாது. வீடு வாங்குவதற்கான தடையை நீக்க செவ்வாய்க்கிழமையன்று, செந்நிற மலர்களால் செவ்வாயை பூஜிக்க வேண்டும்.


அதேபோல, செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன் என்பதால், முருகனை வழிபடுவதும் சொந்த வீடு வாங்க நல்ல வழியாகும்.  


மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்


அதேபோல, வீடு, வாகனம் வாங்கி சுகமாய் ஒருவர் வாழ்வதற்கு ஆதாரம் சுக்கிரன்.  அதேபோல சனிக் கிரகமும் சொத்து வாங்கும் தன்மையில் தனது ஆதிக்கத்தை காட்டுகிறது.


ஒருவரின் ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 6ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் சொந்த வீடு அமைவதில் சிக்கல் ஏற்படும்.


இப்படிப்பட்ட ஜாதகம் உடையவர்கள் சனி, சுக்கிரன் கிரகங்களைச் சாந்தி செய்வதை விட பூமிக் காரகனான செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும்.


வீடற்றவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும்.  இப்படிச் செய்தால் குறை விலகும்.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR