ஆசியாவின் கவர்ச்சிப் பெண் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். 5-வது முறையாக அவர் இந்த பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.  


கடந்த ஆண்டு ஆசியாவின் கவர்ச்சிப் பெண் என்ற பட்டத்தை பெற்று முதலிடத்தை பிடித்த நடிகை தீபிகா படுகோனேவை இந்த வருடம் பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை தட்டிச்சென்றார்.


தொலைக்காட்சி நடிகையான நியா சர்மா இந்த பட்டியலில் 2-வது இடத்தையும், தீபிகாவுக்கு 3வது இடமும், ஆலியா பட்டுக்கு 4-வது இடமும், பாகிஸ்தானிய நடிகை மாஹிரா கானுக்கு 5-வது இடமும் கிடைத்துள்ளது. 


ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாக தேர்வு செய்ததற்காக நடிகை பிரியங்கா சோப்ரா நன்றியை தெரிவித்துள்ளார்.