Happy Promise Day 2018: உங்கள் காதலிக்கு ப்ராமிஸ் பண்ண டிப்ஸ் இதோ!
வேலன்டைன் வீக்-கின் ஐந்தாம் நாளான இன்று வாக்குறுதி நாள் (Promise Day ) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் காதலிக்கு ப்ராமிஸ் தினத்தை நினைவூட்டும் தினமாக மாற்ற சில யோசனைகள்.
வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் தொடங்கி வரும் பிப்ரவரி 14 வரை வேலன்டைன் வீக் (Valentine Week) கொண்டாடம் துவங்கி உள்ளது.
இந்நிலையில் வேலன்டைன் வீக்-கின் ஐந்தாம் நாளான இன்று வாக்குறுதி நாள் (Promise Day ) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் காதலிக்கு ப்ராமிஸ் தினத்தை நினைவூட்டும் தினமாக மாற்ற சில யோசனைகள் இதோ:-
ஒற்றுமையுடன் (Togetherness) வாழ்வதற்காக கடைசிவரை உன்னுடனே ஒற்றுமையுடன் வாழ்வேன் என்று 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை அவர் கண்களை பார்த்து கூறலாம். நேர்மையுடன் (Honesty) எப்போதுமே நான் உன்னிடம் நடந்துகொள்வேன் என்ற சத்தியம் செய்யலாம்.
நம்பரை (Friendship) போன்றும் உனக்கு எல்லாமாகவும் நான் இந்த வாழ்க்கையில் இருப்பேன் என்ற சத்தியத்தை செயொயலாம்.
எந்த சூழ்நிலை வந்தாலும் நான் உன்பக்கம் உனக்கு ஆதரவாக (Support) இருப்பேன்.