Pros And Cons Of Waxing And Shaving : பெண்கள் பலர், தங்களின் உடலின் பல்வேறு பாகங்களில் இருக்கும் முடிகளை அகற்ற வேக்ஸிங் அல்லது ஷேவிங் முறையை பின்பற்றி வௌர்கின்றனர். இதில், நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது. இது குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேக்ஸிங் என்றால் என்ன?


கைகள், கால்கள், பிறப்புறுப்பு, அக்குள் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு முடி வளர்வது சகஜம். இதை நீக்க, பலர் வேக்ஸிங் செய்வது வழக்கம். இதை வீட்டில் அல்லது அழகு நிலையத்தில் பலர் செய்கின்றனர். இதற்கென்று பல பிரத்யேக கிரீம்கள் விற்கின்றன. இவற்றை வாங்கி, சுடவைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவுகின்றனர். பின்பு, வேக்ஸிங்கிற்கு என்றிருக்கும் ஸ்ட்ரிப்ஸை போட்டு வேகமாக பிரிக்கின்றனர். அப்படி செய்கையில், முடி வேரிலிருந்து அகன்று வரும். இதனால் நெடு நாட்களாக முடி வளராமல் இருக்கும். 


வேக்ஸிங்: நன்மைகளும் தீமைகளும்:


வேக்ஸிங்கில் சூடான மற்றும் குளிரான முறைகள் ஈஉர்க்கின்றன. இரண்டுமே முடியை வேரில் இருந்து அகற்றும். ஷேவிங் உடன் ஒப்பிடுகையில் வேக்ஸிங் செய்தால் பல நாட்களுக்கு முடி வளராமல் இருக்குமாம். 3 முதல் 6 வாரங்களுக்கு இது குறித்து கவலைப்பட தேவையில்லை. இதனால், முடி வளர்க்கும் செல்களையும் இது குறைக்கிறதாம். வேக்ஸிங் செய்த பிறகு, சருமம் மென்மையாகவும் மாறும்.  வேக்ஸிங் செய்வது, வலியை ஏற்படுத்தலாம். மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு இது எரிச்சலையும், அலர்ஜியையும் உண்டு செய்யும். சிலருக்கு சருமம் சிகப்பாகி, தடிப்புகள் உருவாகலாம். 


ஷேவிங் என்றால் என்ன?


முடிகளை நீக்க, சோப், கிரீம் அல்லது ஜெல் கொண்டு ரேசார் வைத்து ஷேவ் செய்வதற்கு பெயர்தான் ஷேவிங். 


மேலும் படிக்க | உங்கள் நண்பர்களுக்கு தரவே கூடாத பரிசுகள்! பின்னாடி பிரிய வாய்ப்பிருக்கு..


நன்மைகளும் தீமைகளும்:


ஷேவிங் செய்வது வேக்ஸிங்கை விட வேகமான செயல்முறை ஆகும். இதை, அழகு நிலையத்தில் அல்லாமல் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வேக்ஸிங்கை விட இது வலி குறைவானதாக இருக்கும், ஆனால் இதை பாதுகாப்பாக செய்ய வேண்டியது அவசியம். வேக்ஸிங்கிற்கு உபயோகிக்கும் உபகரணங்கள் அதிக விலை உடையவையாக இருக்கும். ஆனால், ஷேவிங் செய்ய பெரிதாக செலவு செய்ய தேவையில்லை. 


ஷேவிங் செய்வதால் முடியை முழுமையாக நம்மால் நீக்க முடியாது. இதை வேரில் இருந்து அகற்ற முடியாததால் முடி உடனே வளர்ந்து விடும். சில நாட்களுக்குள்ளாகவே மீண்டும் ஷேவிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். சரியாக ஷேவிங் செய்யாவிடில், வெட்டு விழுவதற்கும் தழும்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் காயமும் ஏற்படலாம். சிலருக்கு ஷேவிங் செய்வது தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம். 


எது சிறந்தது?


வேக்ஸிங்கோ, ஷேவிங்கோ எதுவாக இருப்பினும் அது அந்த நபரின் தேர்வாக இருக்க வேண்டும். உங்களுக்கு வலி ஏற்பட்டாலும் முடி அதிக நாட்களுக்கு இருக்க வேண்டாம் என்று தோன்றினால் வேக்ஸிங் செய்யலாம். அல்லது, வலி தாங்க இயலாது என்று தோன்றினால் ஷேவிங் செய்து கொள்ளலாம். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


 


மேலும் படிக்க | 40 வயதிற்குள் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ