தேர்வில் விடைத்தாளில் PUBG விளையாடுவது எப்படி என பதில் எழுதிய சிறுவன் PU தேர்வில் தோல்வி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட் போன் யுகத்தில் பயணித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி (PUBG -playerUnknown's Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தற்போது, வரவேற்பு என்பதைக் கடந்து பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இது தொடர்பான செய்தியை நாம் தினமும் பார்க்கிறோம். ஓய்வில்லாமல் PUBG விளையாடிய மாணவர் மனநல பாதிப்பு. PUBG-ல் முழு நேரத்தையும் செலவிடும் மாணவர்கள் என தினமும் ஒரு செய்தி வருகிறது. 


இந்நிலையில், குஜராத் அரசு PUBG விளையாட்டை தடை செய்துள்ளது. இதை தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் கடாக்கில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவர், தனது கல்லூரி தேர்வு ஒன்றில் பாடம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு PUBG விளையாடுவது எப்படி என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் அந்த மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இது குறித்து கருத்து அந்த மாணவர் கூறுகையில், எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஓன்று PUBG மிகவும். இதனால், PUBG விளையாடுவதற்காக நான் கல்லூரிக்கு செல்லாமல் இருப்பேன். தேர்வுக்கும் 15 நாட்களுக்கு முன்னதாகவே நான் PUBG விளையாட தொடங்கினேன். அதன் ஆர்வத்தால் தேர்வில் கவனம் கொள்ள முடியவில்லை. நான் எனது தேர்வு தாளில் PUBG குறித்து எழுதியதால் எனக்கே என் மேல் கோபமாக உள்ளது. தற்போது என் போனை எனது பெற்றோர்கள் பிடிங்கிவிட்டனர். ஆனாலும் என் எண்ணமெல்லாம் PUBG மீதே உள்ளது. அது எவ்வளவு அபாயகரமான விளையாட்டு என்பது எனக்கு தற்போது புரிகிறது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவரை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.