கர்நாடகாவில் விடுதிகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகை புகைப்பிடிக்க தடை விதித்துள்ளது அம்மாநில அரசு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் பப்கள், உணவு விடுதிகள் ஆகிய பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்து திடீர் சட்டத்தை அமைபடுத்தியுள்ளது அம்மாநில அரசு. இது குறித்து, நேற்று புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், கர்நாடகா மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்துள்ளதாக அம்மாநில நகர மேம்பாட்டு துறை மந்திரி UT காதர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் உள்ள அம்சங்களை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.


பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது. புகையிலை பொருட்கள், மதுபானம் மீதான வரி சலுகையை திரும்ப பெற அரசு ஆலோசித்து முடிவு எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இந்த நடைமுறையை மீறினால், 2001 ஆம் ஆண்டு புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பப் மற்றும் உணவு விடுதி உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.