பியார் பிரேமா காதல் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு மாலை 3.30 மணிக்கு Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். அதேநேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். 


ஏற்கெனவே இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் High On Love என்ற பாடல் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி உள்ளது. மேலும் கடந்த ஜூலை 29ம் தேதி  'பியார் பிரேமா காதல்' படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டது.


இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு மாலை 3.30 மணிக்கு Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டு, தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.