ராட்சச மலைப்பாம்பு ஒன்று பெரிய முதலையை அப்படியே முழுசாக விழுங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில்  வைரலாக பரவி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பிரபல புகைப்பட கலைஞர் மார்ட்டின் முல்லர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கேமராக் கண்களில் இந்த காட்சி சிக்கியுள்ளது. உடனே அந்த காட்சிய அவர் புகைப்படமாக எடுத்துள்ளார். 


இந்த புகைப்படங்கள் முதலில் GG வனவிலங்கு மீட்பு முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டன. இதையடுத்து அந்த புகைப்படம் இணையத்தில்  வைரலாக பரவியது. இப்படங்கள் முதன்முதலில் ஜூன் 1 அன்று வெளியிடப்பட்டன. இப்போது வரை இந்த இடுகை 21,000 க்கும் மேற்பட்ட கருத்துகளையும், சுமார் 42,000 ஷேர், 20,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.



இந்த வகை மலைப்பாம்பு ஆலிவ் வகையை சேர்ந்தது. இந்த படத்தில் காணப்படும் மலைப்பாம்பு பாம்பு மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் காணப்படும் 2-வது மிகபெரிய மலைப்பாம்பு என்றும் தெரிவித்துள்ளனர். மலைபாம்புகளின் வாய் ரப்பர் போன்று நெகிழுத் தண்மை கொண்டது. ஏனென்றால் இதற்கு மேல் மற்றும் கீழ்த்தாடைகள் தனியாக இருக்கும். இதன் மூலம் அவற்றை விட பெரிய விலங்குகளான மான்கள், முதலைகள் உள்ளிட்டவற்றையும், மனிதர்களையும் கொன்று விழுங்கி விடும். 


ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட ஆலிவ் மலைப்பாம்பு 13 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. இந்தோனேசியாவில் கடந்த 2017-ல் 23 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மனிதர் ஒருவரின் சடலம் கைப்பற்றப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.