புதுடில்லி: நாட்டின் மந்தமான பொருளாதாரம் (Economy) காரணமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் இருந்தாலும் மக்களுக்கு வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? நாட்டின் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது, நிதி முதல் வாடிக்கையாளர் சேவை வரை மூன்றாம் தரப்பினருக்கு கொடுத்து வரும் நேரத்தில். நாட்டில் பலருக்கு வேலைகள் கொடுக்கும் ஒரு நிறுவனம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசானின் வலைத்தளத்திலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் ஒரு நிர்வாகி அமேசான் நிறுவனத்தின் ஊழியர் அல்ல, ஆனால் க்வெஸ் கார்ப் நிறுவனத்தின் ஊழியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 


இந்த நிறுவனத்தின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இந்த நிறுவனம் இந்தியாவில் அதிக வேலைகளை வழங்குகிறது. பெரிய நிறுவனங்கள் குஸ் கார்ப் (Quess Corp) நிறுவனத்திலிருந்து ஊழியர்களை அவுட்சோர்ஸ் செய்கின்றன. 


சமீபத்திய தரவுகளின்படி, தற்போது பெங்களூரை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுமார் 3.85 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் எந்த தனியார் துறை நிறுவனத்திலும் இந்த ஊழியர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம்.


இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை பின்வருமாறு…


பொதுத்துறை:
இந்திய ராணுவம் - 13-14 லட்சம் ஊழியர்கள்
இந்திய ரயில்வே - 1.3 மில்லியன் ஊழியர்கள்
தபால் துறை - 4.2 லட்சம் ஊழியர்கள்
 
தனியார் துறை:
க்வெஸ் கார்ப் - 3.8 மில்லியன் ஊழியர்கள்
டி.சி.எஸ்- 3.56 லட்சம் ஊழியர்கள் (வெளிநாட்டில் சுமார் 90 ஆயிரம் ஊழியர்கள்)
இன்போசிஸ் - 2.4 லட்சம் ஊழியர்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - 1.94 லட்சம் ஊழியர்கள்


தரவுகளின்படி, 2016 முதல் "க்வெஸ் கார்ப்" நிறுவனம் ஆண்டுக்கு 38 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. அமேசான், சாம்சங், ரிலையன்ஸ், வோடபோன் இந்தியா மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றிலிருந்து உலகளவில் 2000 வாடிக்கையாளர்களை க்வெஸ் கார்ப் கொண்டுள்ளது என்று நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சூரஜ் மொராஜே தெரிவித்தார். நிறுவனத்தின் 5000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளிநாட்டில் பணியாற்றுகின்றனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.