மத்திய பட்ஜெட் 2023க்கான கவுண்ட்டவுன் தொடங்கியது. ரயில்வே அமைச்சகத்தில் பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு பல பரிசுகள் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் கட்டணத்தில் விலக்கு அளிப்பதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்றாலும், மூத்த குடிமக்கள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரயில்வே துறையின் வருமானம்


கடந்த சில நாட்களாக ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ரயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரை, ரயில்வே கட்டணம் மூலம் ரூ.48,913 கோடியை ரயில்வே ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 71 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 2019 முதல், மூத்த குடிமக்கள் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது


கொரோனாவிற்கு முன்பு கிடைத்த சலுகை


கொரோனாவுக்கு முன், இந்திய ரயில்வே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கட்டணத்தில் 40 சதவீத தள்ளுபடியை வழங்கியது. அதே நேரத்தில், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு டிக்கெட்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியது. ரயில்வேயில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் சராசரியாக 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் மற்றும் தீவிர நோயாளிகளுக்கும் ரயில்வே சலுகை அளிக்கிறது.


மேலும் படிக்க | இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்! தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! 


சலுகை விதிமுறைகளில் மாற்றம்


முன்னதாக, மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை தொடர்பாக, வயது அளவுகோல் போன்ற விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அரசாங்கம் மாற்றி அமைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. 58 வயது பெண்களுக்கும் 60 வயது ஆண்களுக்கும் என இருந்த சலுகைக் கட்டண வசதியை, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என அரசு வழங்கலாம் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன. 


பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு


இந்த முறை பட்ஜெட்டில் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் வகையில், மணிக்கு 200 கி.மீ வேகத்தில் ஓடும் பல அதிவேக ரயில்களை இயக்குவது குறித்து அரசு அறிவிக்கலாம். இந்த ரயில்கள் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அல்லது அது போன்ற பிற ரயில்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மணிக்கு 180 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ள வழித்தடங்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


100 புதிய வந்தே பாரத் ரயில்கள் குறித்த அறிவிப்பு


100 புதிய வந்தே பாரத் ரயில்களை அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரயில்வே பட்ஜெட்டிற்கு 30% கூடுதல் ஒதுக்கீட்டை அரசிடம் கோரியுள்ளது. இதன் மூலம், ரயில்வேயின் உள் கட்டமைப்பு பலப்படுத்தப்படுவது மட்டுமின்றி, அழகுபடுத்துதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.


மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! தயாராகும் மோடி அரசு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ