சென்னை: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்தாலும், அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்னும் மத்திய அரசு இதுக்குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால் சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாக்-டவுன் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் பலரின் வேலைகள் என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 


அதேநேரத்தில் தென் இந்தியா ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது மருத்துவர்கள், நர்சிங் பணியாளர்கள், ஆய்வக உதவியாளர், ரேடியோகிராஃபர், மருத்துவமனை உதவியாளர் மற்றும் துப்புரவு உதவியாளர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 600 இடங்களுங்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகின்றன என அறிவித்துளது. இதன் முழு விவரத்தை https://drive.google.com/file/d/150WNYUppybtSbc4bE-fbi8_1OainZiW6/view என்ற இணையதளத்தை கிளிக் செய்து அறிந்துக்கொள்ளவும்.


நிறுவனம்: தென்னிந்திய இரயில்வே (Southern Railway)
இணையதளம்: www.sr.indianrailways.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
காலியிடங்கள்: 600
கல்வித்தகுதி: பத்தாவது முதல் பட்டப்படிப்பு வரை
வயது: வரம்பு இல்லை
பணியிடம்: தமிழ்நாடு
பணி: நான்கு விதமான பணி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நாள்: 17-04-2020


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 600
மருத்துவர்கள் - 72 இடங்கள்
நர்சிங் பணியாளர்கள் - 120 இடங்கள்
ஆய்வக உதவியாளர் - 24 இடங்கள்
கதிரியக்கவியலாளர் - 24 இடங்கள்
மருத்துவமனை உதவியாளர் - 120 இடங்கள்
ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் - 240 இடங்கள்