இந்தியாவின் டாப் 10 காவல்நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது MHA!
நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் ராஜஸ்தானில் உள்ள கலு காவல் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது!!
நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் ராஜஸ்தானில் உள்ள கலு காவல் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது!!
2016-ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், போன்ற பல்வேறு பணிகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விருதை வழங்கி வருகிறது.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டத்தில் உள்ள கலு காவல்நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. குற்றங்களை தடுத்தல், விசாரணை, வழக்குகளை முடித்து வைத்தல், சட்டம் ஒழுங்கை காத்தல் போன்ற செயல்பாடுகள் காரணமாக அதற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் காவல்நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், காவலர்கள் குறித்த மக்களின் எண்ணங்களும் காரணங்களும் இதில் அடங்கும்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள நிகோபார் மாவட்டத்தை சேர்ந்த கேம்ப்பெல் பே காவல் நிலையம் 2-வது இடத்தில் உள்ளது. பெண்களுக்கான தனி உதவி மையம், தொழில்நுட்ப அறை, புகார் அளிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சரியான காத்திருப்பு அறை ஆகிய வசதிகளுக்காக இந்த இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களில் 3-வது இடத்தில் மேற்குவங்க மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் உள்ள ஃபராக்கா காவல்நிலையம் உள்ளது. குளிர் சாதன வசதியுடன் கூடிய அறை, பொதுமக்கள் - காவலர்கள் தொடர்புக்கு ஏற்ற சூழல், சிசிடிவி கேமராக்கள், தீயணைப்பு வசதிகள் போன்ற வசதிகள் இந்த காவல்நிலையத்தில் சிறப்பாக உள்ளன.
முதல் 10 இடங்களை பிடித்த காவல்நிலையங்கள்:
1. கலு - ராஜஸ்தான்
2. காம்ப்பெல் பே - அந்தமான் நிகோபார் தீவு
3. ஃபரக்கா - மேற்கு வங்கம்
4. நெட்டப்பாக்கம் - புதுச்சேரி
5. குடகேரி - கர்நாடகா
6. சோப்பல் - சிம்லா
7. லகேரி - ராஜஸ்தான்
8. பெரியகுளம் - தமிழ்நாடு
9. முன்ஸ்யாரி - உத்தர்கண்ட்
10. சர்ச்சோரம் - கோவா