ஏழைகளுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி செய்கிறது, அதே நேரத்தில் உணவு தானியங்களை குறைந்த விலையில் அல்லது இலவசமாக விநியோகம் செய்கிறது. அதே நேரத்தில், ஏழைகளின் நலனுக்காக அரசு ரேஷன் கார்டுகளையும் வழங்குகிறது. இந்த ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கார்டுதாரரின் குடும்பத்திற்கு இலவசமாக அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை அரசால் வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் பலர் சோம்பேறித்தனத்தால் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யாமல் இருக்கிறோம், இத்தகைய சூழ்நிலையில், இது போன்ற குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு மூலம் கிடைக்கப்படும் பலன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே ரேஷன் கார்டு மூலம் கிடைக்கும் பலன்கள் வேண்டுமானால், ரேஷன் கார்டுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? 


பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் அதன் குடியிருப்பாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கி வருகின்றது. அதே நேரத்தில், ரேஷன் கார்டில் வைத்திருப்பவர்களுக்கு வெவ்வேறு சலுகைகள் மாநிலங்களால் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டின் சில பொதுவான நன்மைகளைப் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.


ரேஷன் கார்டின் நன்மைகள்
- ரேஷன் கார்டை அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.
- ரேஷன் கார்டு மூலம், பயனாளிக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்கும்.
- ரேஷன் கார்டு மூலம் மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெறுவதும் மக்களுக்கு எளிதானது.
- பல மாநிலங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் மாணவர்களுக்கு உதவித்தொகையையும் வழங்குகின்றன.
- ரேஷன் கார்டைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடங்க முடியும்.
- புதிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கவும் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
- புதிய மொபைல் சிம் வாங்கவும் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
- புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
- புதிதாக எல்பிஜி இணைப்பு எடுக்க வேண்டும் என்றால், ரேஷன் கார்டு மூலம் புதிய இணைப்பு பெறலாம்.


மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு லாட்டரி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ