2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இலவச ரேஷன் திட்டமான 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தை  ஆறு மாதங்களுக்கு, அதாவது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்ததுள்ளது.  அதேபோன்று உத்தரப் பிரதேசத்திலும் அடுத்த நாள், இதேபோன்ற திட்டத்தை மாநில அரசு மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.  ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது, அரசின் இலவச திட்டங்களை பெற்றுக்கொள்ள ரேஷன் கார்டு முக்கியமானதாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ஏப்ரல் மாத இறுதியில் ஐபிஓ வெளிவரக்கூடும்


அத்தகைய முக்கியமான ரேஷன் கார்டில் சில விதிகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறை மாற்றுவதாக செய்திகள் வெளியாகியது.  ரேஷன் கார்டில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து அனைத்து மாநிலங்களையும்  உணவு மற்றும் பொது விநியோகத் துறை கூட்டத்திற்கு அழைத்து கலந்தாலோசிக்கும் என்று கூறப்படுகிறது, இதில் தகுதிகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் அமைக்கப்படும்.  இந்த மாற்றமானது தற்போதுள்ள திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களை பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஆன்லைனில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சுமார் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தேசிய உணவு பாதுகாப்பது சட்டத்தால் பயன்பெறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.  இதில் வசதியானவர்களாக இருப்பவர்களும் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி கொள்கின்றனர், இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு சில சலுகைகள் கிடைக்காமல் போகிறது, இதனை அரசு கருத்தில்கொண்டு சில மாற்றங்களை செய்துள்ளது.  மேலும் பணி காரணமாக சொந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் பயனடையும் வகையில் ஏற்கனவே அரசு 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதன்மூலம் ஒவ்வொருவரும் அவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்களோ அங்கேயே ரேஷன் பொருளை வாங்கிக்கொள்ளம்.


மேலும் படிக்க | Bank Holiday: இந்த வாரம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR