Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!
லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு பின்னடைவாக, ரேஷன் கடைகளிலிருந்து பொது விநியோக முறைமையின் (PDS) கீழ் இலவச அல்லது மானிய விலையில் பொருட்களைப் பெறும் மக்களுக்கான தகுதிகளை புதுப்பிக்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி: லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு பின்னடைவாக, ரேஷன் கடைகளிலிருந்து பொது விநியோக முறைமையின் (PDS) கீழ் இலவச அல்லது மானிய விலையில் பொருட்களைப் பெறும் மக்களுக்கான தகுதிகளை புதுப்பிக்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்துள்ளது.
தகுதியை தீர்மானிக்கும் புதிய விதிகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். பி.டி.எஸ் திட்டத்தின் (PDS) பயனாளிகளுக்கான அளவுகோல்களை இறுதி செய்வதற்காக மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் இந்த துறை பல சுற்று சந்திப்புகளை நடத்தியுள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி. தற்போது, 80 கோடி இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயனடைகின்றனர்.
எனினும், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உணவை உறுதிசெய்யும் நோக்கில் இருக்கும் இந்த திட்டத்தை நிதி ரீதியாக வளமாக உள்ள பலர் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டது.
ALSO READ: Ration Card News: ஸ்மார்ட் அட்டைகளை அச்சிடும் பணி இன்று முதல் துவங்கியது
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தற்போதுள்ள அளவுகோல்களில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் உண்மை நிலவரத்தை கவனத்தில் கொள்ளும். உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், தரநிலைகளில் மாற்றம் குறித்து கடந்த ஆறு மாதங்களாக மாநிலங்களுடன் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.
பயனாளிகளுக்கான (Ration Card Beneficiaries) புதிய தகுதி மற்றும் தரங்களை தயாரிக்க மாநிலங்கள் வழங்கிய பரிந்துரைகளை அமைச்சகம் இப்போது ஒருமுகப்படுத்தி வருகிறது. புதிய தரநிலைகள் ஜூலை மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தரநிலைகளை உருவாக்கிய பிறகு பி.டி.எஸ் திட்டத்திலிருந்து தகுதியான பயனாளிகள் மட்டுமே பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ (One Nation One Ration Card) திட்டத்தின் மூலம், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 69 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ளனர்.
ALSO READ: Tamil Nadu: ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு: அரசு அதிரடி அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR