வங்கிக்கு சென்று பணம் எடுக்கும் காலம் மலை ஏறி விட்டது. இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் பணம் எடுக்க ஏடிஎம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பணம் எடுக்கும்போது ஏடிஎம்மிலேயே பணம் மாட்டிக்கொள்கிறது போன்ற செய்திகளை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்க கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற சூழ்நிலையில், பலர் பதற்றமடைந்து மீண்டும் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை  வெளியே எடுக்க முயற்சிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நீங்கள் பீதி அடைய தேவையில்லை.  ஏடிஎம்மில் சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழியை  அறிந்து கொள்ளலாம்.


வங்கியை தொடர்பு கொள்ளும் முறை


கணக்கு வைத்திருப்பவர் தனது வங்கி ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் போது பணம் வரவில்லை என்றாலோ, பணம் வராமலேயே கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டாலோ, அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ளவு வேண்டும் என ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுகின்றன. வங்கி மூடப்பட்டிருந்தால், வங்கியின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து அதைப் பற்றி உடனே தெரிவிக்கவும். உங்கள் புகார் பதிவு செய்யப்படும். இதற்காக வங்கிக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும்.


மேலும் படிக்க | EPFO: இந்த தேதிக்குள் வட்டி பணம் கணக்கில் வரும், இருப்பு நிலையை இப்படி தெரிந்துகொள்ளலாம் 


பரிவர்த்தனை சீட்டு


ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது, ​​உங்கள் பரிவர்த்தனை தோல்வியடைந்திருக்கலாம். அப்போது  நீங்கள் அதன் பரிவர்த்தனை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எனவே சீட்டை எடுக்க மறக்காதீர்கள். சில காரணங்களால் சீட்டை எடுக்க முடியாவிட்டால், நீங்கள் வங்கி ஸ்டேட்மெண்டையும் கொடுக்கலாம். பரிவர்த்தனை சீட்டு முக்கியமானது. ஏனெனில் அதில், ஏடிஎம் ஐடி, இடம், நேரம் மற்றும் வங்கியிலிருந்து வந்த பதில் குறியீடு ஆகியவற்றை அச்சிடுகிறது.


வங்கி 7 நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தரும்


மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற வழக்குகளைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பு வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. இதன்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வங்கி 7 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும். ஒரு வாரத்திற்குள் வங்கி உங்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால், அதற்காக நீங்கள் வங்கிக் குறைதீர்ப்பாளரை அணுகலாம். 7 நாட்களுக்குள் வங்கியால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர முடியவில்லை என்றால், அதன் பிறகு வங்கி வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு ரூ.100  என்ற வீதத்தில் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR