மன அழுத்திலிருந்து விடுபடவும், தமக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கும் ஆரோக்கியமான நட்பு பாராட்டும் நண்பர்கள் வாடைக்கு கிடைக்கும்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தம் என்பது பலரையும் துரத்தும் நோயாக உள்ளது. வீட்டுப் பிரச்னைகள், அலுவலகப் பிரச்னைகளால் இந்த மன அழுத்தம் எளிதில் பற்றிக் கொள்கிறது. சிலர் மன அழுத்தத்தால் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ளாமல் எதனால் இப்படி நடக்கிறது என புலம்புவார்கள். இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 


பெரும்பாலும், இப்படி பட்ட சூழ் நிலையில் நாம் நமது நெருங்கிய நண்பனிடமோ அல்லது தோழியிடமோ பகிர்ந்து கொளது வழக்கம். இருந்தாலும் நம்மில் சிலர் அவர்களை ஏன் சொல்லை செய்ய வேண்டும் என்று நினைப்பதும் உண்டு. இதற்காக ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.  


மும்பையைச் சேர்ந்த 30 வயது குஷால் பிரகாஷ் என்ற இளைஞன் மன அழுத்தத்திலிருந்து விடுபட RABF ஆப்பை கடந்த ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அந்த APP-ன் சிறப்பு என்னவெனில் பெண்கள் மன வருத்தத்திலோ, மன அழுத்தத்திலோ இருந்தால் அந்த ஆப்பில் சென்று தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்து வாடைகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடன் தன் வருத்தத்தை பகிர்ந்து கொள்ளலாம். 



இது குறித்து குஷால் கூறுகையில், “இந்த ஆப் டேட்டிங் செய்வதற்கோ, செக்ஸிற்காகவோ தொடங்கப்பட்டது அல்ல. அப்படி ஒருபோதும் இயங்காது. இதன் நோக்கம்,  தனிமையில் இருப்போர், மன அழுத்தத்தில் இருப்போருக்கு ஆறுதலாக  ஒரு துணையை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே. அவர்கள் உங்களுக்கு அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்குவார்கள். நட்பு பாராட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார்.



இந்த ஆப்பில் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டும் தான் இருக்கின்றனர். இதில் கல்லூரி செல்லும் ஆண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் ஆண்களே பகுதி நேர வேலையாக செய்கின்றனர். இதில் 15-20 நிமிடங்களுக்கு நேரத்திற்கும் 500 முதல் 3000 வரை வசூலிக்கப்படுகிறது.