Republic Day: குடியரசு தினம் உருவான வரலாறு, முக்கியத்துவம் என்ன?
Republic Day 2023: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. அந்தவகையில் இன்று நாடு முழுவதும் குடியரசு தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போது நாம் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய ஈர்ப்பு ஆண்டு அணிவகுப்பாகும். இந்த பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் தொடங்கி இந்தியா கேட் நிறைவு பெற்று முடிவடையும். குடியரசு தினத்தின் போது நாட்டின் குடியரசு தலைவர் புது டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். அதன் பின் இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை போன்றவற்றின் இந்திய கலாச்சார மற்றும் சமூக பாரம்பரிய அணி வகுப்புகள் மற்றும் விமான காட்சிகளையும் காட்டப் படும். அந்த வகையில் இன்று நாடு முழுவதும் குடியரசு தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
குடியரசு தினம் ஏன் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26 ஆம் தேதி விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
மேலும் படிக்க | Republic Day 2023: குடியரசு தின வாழ்த்துக்கள், கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
12 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் தேதி அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950 ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் தேதியை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் குடியரசு தின விழா
* டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி, மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்.
* தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தினத்தில் அணிவகுப்பு நடைபெறும்.
* கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் யார்
இந்த ஆண்டு எகிப்து நாட்டின் அதிபர் அப்தல் பத்தா எல் சிஸி தான் 2023 குடியரசு தின நிகழ்சியின் தலைமை விருந்தாளியாக இருப்பார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும் 24-ம் தேதி எகிப்து நாட்டு அதிபர் இந்தியா வருகிறார். அவருடன் 180 பேர் கொண்ட குழுவினர் வருகின்றனர்.
மேலும் படிக்க | Republic Day 2023: குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த பாதுகாப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ